“மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்

மது பழக்கத்தால் தனது வாழ்க்கை மோசமாக மாறியது என நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Manisha koirala Open Talk | இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்

சிம்லா: மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தனது வாழ்க்கையே தொலைந்துபோனதாக நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்த நாயகிகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. இந்தியன் படத்தில் கமலுடனும், பாபாவில் ரஜினியுடனும் ஜோடி போட்டவர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் ஆதர்ச நாயகி மனிஷா தான்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் கலக்கியவர் மனிஷா. இந்தி சினிமாவிலும் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் அவர்.

விவாகரத்து

விவாகரத்து

சினிமா முன்னணி நடிகையாக திகழ்ந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு தோல்வியிலேயே முடிந்தது. சாம்ராட் டாகல் என்பவரை திருமணம் செய்த மனிஷா, பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகை மனிஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார். இதையடுத்து புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மனிஷா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.

கேள்வி

கேள்வி

இந்நிலையில் இமாச்சலபிரதேச மாநிலம் கசுலி எனும் இடத்தில் நடந்த குஷ்வந்த் இலக்கிய திருவிழாவில் நடிகை மனிஷா கொய்ராலா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் புற்றுநோய் பாதிப்பு குறித்து கேட்கப்பட்டது. புற்றுநோயால் மூன்று ஆண்டுகள் தான் பட்ட கஷ்டங்களை மனிஷா கொய்ராலா பகிர்ந்துகொண்டார்.

எனது புத்தகம்

எனது புத்தகம்

இதுகுறித்து அவர் பேசியதாவது, " எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த புத்தகம் எழுதினேன். என்னை பார்த்து யாரேனும் புற்றுநோயில் சிக்கி குணமடைந்தவர் என்று சொன்னால் அதற்காக வருத்தப்பட மாட்டேன்.

சவால்

சவால்

புற்றுநோய் பாதிப்பில் நான் சிக்கியதை மறந்து எனது நடிப்பு மற்றும் திறமை பற்றி மக்கள் ஒரு நாள் பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது நான் சாவை எதிர்கொண்டேன். ஒரு ரோஜா தனது நிறத்தை இழக்கப்போகிறது என்று உணர்ந்தேன்.

மதுவால் நாசமானது

மதுவால் நாசமானது

ஆரம்பத்தில் மது பழக்கம் இருந்தது. இதனால்தான் எனது வாழ்க்கை மோசமாக மாறியது. அதை புத்தகத்திலேயே கூறி இருக்கிறேன். வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்போது புதிதாக பிறந்த உணர்வு ஏற்படுகிறது", என மனிஷா கொய்ராலா கூறினார்.

மாப்பிள்ளை படம்

மாப்பிள்ளை படம்

திருமண வாழ்க்கை, புற்றுநோய் பாதிப்பு என சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த மனிஷா கொய்ராலா, தமிழில் கடைசியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் தனுஷுக்கு வில்லியாக அவரது மாமியார் வேடத்தில் அவர் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X