அட, அப்பவே எவ்வளவு அழகா இருக்கார் பாருங்க.. தனது முதல் பட ஸ்டில்லை வெளியிட்ட பிரபல நடிகை..!

By

மும்பை: பிரபல நடிகை தனது முதல் படத்தின், புகைப்படத்தை இப்போது பகிர்ந்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை மனீஷா கொய்ராலா, நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஏராளமான இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர், கடந்த 2010- ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரைத் திருமணம் செய்தார்.

அமெரிக்கா

அமெரிக்கா

பின்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இரண்டே வருடத்தில் விவாகரத்து செய்தார். பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா, அதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார். அமெரிக்காவுக்குச் சென்றும் சிகிச்சை பெற்றார். பின்னர் அந்த நோயில் இருந்து முழுவதுமாகக் குணமடைந்தார். அதற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

ஒரு மெல்லிய கோடு

ஒரு மெல்லிய கோடு

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து அவர் தமிழ், கன்னடத்தில் நடித்த படம், ஒரு மெல்லிய கோடு. இதை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கி இருந்தார். பிறகு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், நேபாள அரசு, தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு உட்பட்ட காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்துடன் இணைக்கப்பட்டிருந்தன.

கடுமையான எதிர்ப்பு

கடுமையான எதிர்ப்பு

நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு மனிஷா கொய்ராலா ஆதரவு தெரிவித்து அதை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. 'இந்தியாவில் சம்பாதித்துவிட்டு எங்களுக்கு எதிராக இருப்பதா? வெட்கம் இல்லையா?' என்று அவருக்கு எதிராக நெட்டிசன்கள் கடுமையாக விளாசினர். எல்லைப் பிரச்னை பற்றி தனிநபர் பேசக்கூடாது என்றும் கூறியிருந்தனர்.

பேரி பேட்டாவ்லா

பேரி பேட்டாவ்லா

இது பரபரப்பாகி பின்னர் அடங்கியது. நடிகை மனிஷா கொய்ராலா, சுபாஷ் கய் இயக்கிய சவுதாகர் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், அதற்கு முன்பே, பேரி பேட்டாவ்லா என்ற நேபாளப் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

மதர் இண்டியா ரீமேக்

மதர் இண்டியா ரீமேக்

அதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், மனிஷா கொய்ராலா. இந்தப் படத்தில் பிரகாஷ் அதிகாரி என்பவர் மனிஷாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தி அறிமுகத்துக்கு ஒரு வருடத்துக்கு முன் உருவானது இந்தப் படம். மனிஷா இன்னொரு நேபாளப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அது இந்தியில் ஹிட்டான மதர் இண்டியா படத்தின் ரீமேக். அது எடுக்கப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X