இசைஞானியின் 1417-வது படத்தில் இணைந்த மனிஷா யாதவ்... கனவு நனவானதாக குஷி

சென்னை : நடிகர் பிரஜன், மனிஷா யாதவ் நடிப்பில் அருவா, சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் நினைவெல்லாம் நீயடா.

இந்தப் படம் இசைஞானி இளையராஜாவின் 1417-வது படமாக உருவாகி வருகிறது.

இதனிடையே, இளையராஜாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆவல் இதன்மூலம் நிறைவேறியுள்ளதாக மனிஷா யாதவ் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூட காதல் படங்கள்

பள்ளிக்கூட காதல் படங்கள்

காதல் படங்கள் என்றாலே மக்கள் மனதில் நீங்காத இடத்தை எப்போதும் பிடித்துவிடும். அதற்கு கோலிவுட், டோலிவுட் என்ற வித்தியாசங்கள் எதுவும் இல்லை. அதிலும் குறிப்பாக முதல் காதலை படம்பிடித்த எந்தப் படமும் சோடை போனதில்லை. அழகி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், காதல், 96 என்று இந்த வரிசையில் சிறப்பான படங்கள் பல உள்ளன.

நினைவெல்லாம் நீயடா படம்

நினைவெல்லாம் நீயடா படம்

அந்த வகையில் முதல் காதலை மையமாக கொண்டு உருவாகி வருகிறது நினைவெல்லாம் நீயடா படம். இந்தப் படத்தில் நடிகர் பிரஜன், மனிஷா யாதவ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மனிஷாவிற்கு சமீபத்தில் நடித்த ஒரு குப்பை கதை சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ள நிலையில் இந்தப் படத்தில் அழகான நாயகியாக வலம் வருகிறார்.

ஆதிராஜன் இயக்கம்

ஆதிராஜன் இயக்கம்

படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார் ஆதிராஜன். இவர் முன்னதாக சிலந்தி, ரணதந்த்ரா, அருவா, சண்ட படங்களை இயக்கியுள்ளார். படத்தை லேகா தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

அறிமுகமாகும் சினாமிகா

அறிமுகமாகும் சினாமிகா

படத்தில் இளம் வயது நாயகன், நாயகியாக, மாஸ்டர் படப்புகழ் ரோகித் மற்றும் வினோதய சித்தம் படப்புகழ் யுவஸ்ரீ நடித்துள்ளனர். இவர்களுடன் மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். மேலும் மனோபாலா, முத்துராமன், மதுமிதா, பட அதிபர் பி.எல் தேனப்பன் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.

 பள்ளிக்கூட காதலின் ஆழம் கூறும் படம்

பள்ளிக்கூட காதலின் ஆழம் கூறும் படம்

பள்ளிக்கூட காதலின் ஆழத்தை இந்தப் படம் அழகியலோடு கூறுவதாக படத்தின் இயக்குநர் ஆதிராஜன் தெரிவித்துள்ளார். பியார் பிரேமா காதல், இடியட் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இளையராஜாவின் 1417வது படம்

இளையராஜாவின் 1417வது படம்

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பாக இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார். அவரது 1417வது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தின் 40 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மனிஷா யாதவ் மகிழ்ச்சி

மனிஷா யாதவ் மகிழ்ச்சி

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து மனிஷா யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்கள் தனக்கு சிறப்பான அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ள நிலையில், நினைவெல்லாம் நீயடா படம் தனது நடிப்பு மற்றும் நடனத் திறமைக்கு தீனிப் போடும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேறிய நீண்டநாள் கனவு

நிறைவேறிய நீண்டநாள் கனவு

இதுவரை இத்தகைய அழுத்தமான கேரக்டரில் தான் நடித்ததில்லை என்றும் இது தனக்கு மிகவும் சவாலான கேரக்டர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் இளையராஜாவின் இசையில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு இதன்மூலம் நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X