தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்த மனிஷா யாதவ்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி, இடம் பொருள் ஏவல் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்ற போது,எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டிய நடிகை மனிஷா யாதவ், தற்போது, நினைவெல்லாம் நீயடா பட தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
2012ம் ஆண்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். பெங்களூரை பூர்வீகமாக் கொண்ட இவர், முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இதையடுத்து, சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படம் மூலம் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகை மனிஷா யாதவ்: கணிசமான படங்களில் நடித்து வந்த மனிஷா யாதவிற்கு படவாய்ப்பு குறைந்ததால், வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு கிளுகிளுப்பான ஆட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஒரே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை நெஞ்சத்தை கொள்ளையடித்த மனிஷா யாதவ் நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்குப்போட்டார்.

உண்மையை பேசுங்க: இதையடுத்து, அண்மையில் வலைப்பேச்சு பிஸ்மி பேசிய வீடியோ ஒன்றில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் ஹீரோயினாக மனிஷா யாதவ் கமிட்டாகி, பின் திடீரென விலகினார். அவர் விலகியதற்கு காரணம், கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பில் சீனு ராமசாமி பாலியல் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதனால்,அவர் படத்திலிருந்து மனிஷா விலகியதாகவும் பிஸ்மி குற்றஞ்சாட்டி இருந்தார். இவர் கூறிய இந்த குற்றச்சாட்டு சினிமாவில் பெரிய புயலை கிளப்பிய நிலையில், சீனு ராமசாமி அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். இதற்கு மனிஷா யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீனு ராமசாமி சார் உண்மையை பேசுங்கள் என பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் சீனு ராமசாமி மீதான குற்றச்சாட்டை மனிஷா யாதவ் ஒப்புக்கொண்டார் என்று செய்திகள் வெளிவந்தன.
தயாரிப்பாளர் மீது புகார்: தற்போது மனிஷா யாதவ், ஆதிராஜன் இயக்கி உள்ள நினைவெல்லாம் நீயடா படத்தில் நடித்து நடித்துள்ளார். இதில் பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நடிகை மனிஷா யாதவ், படத்தின் தயாரிப்பாளர் மீது பரபரப்பான புகார் ஒன்றை கூறியுள்ளார்.இந்த படத்திற்காக தனக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது என்றும், இது நாள் வரை தயாரிப்பாளர் அந்த பணத்தை தனக்கு தரவில்லை, படம் வெளியாவதற்குள் அந்த பணத்தை தனக்கு தரவேண்டும் என்றும் மனிஷா யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











