இப்படி மாற்றிய லாக்டவுன்.. தனது காதல் கணவருக்கு ஸ்டைலாக வேற லெவல் ஹேர்கட் செய்த பிரபல ஹீரோயின்!

By

சென்னை: பிரபல நடிகை தனது கணவருக்கு ஹேர்கட் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Recommended Video

Quarantine Workout | Vijay Lakshmi Animal style movement | Lock Down Diaries

பெங்களூரைச் சேர்ந்தவர், நடிகை, மனிஷா யாதவ். இவர், பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே கவனிக்கப்பட்ட மனிஷா, தொடர்ந்து சுசீந்திரன் இயக்கிய 'ஆதலால் காதல் செய்வீர்' என்ற படத்தில் நடித்தார்.

ஒரு குப்பை கதை

ஒரு குப்பை கதை

மாடர்ன் காதலை அதிர்ச்சியுடன் சொல்லிய இந்தப் படமும் கவனிக்கப்பட்டது. இதையடுத்து கரு பழனியப்பன் இயக்கிய ஜன்னல் ஓரம் படத்தில் நடித்தார். அடுத்து, விதார்த் ஜோடியாக பட்டைய கிளப்பணும் பாண்டியா, ஜி.வி.பிரகாஷ் குமாரின் த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை உட்பட சில படங்களில் நடித்தார். வெங்கட் பிரபுவின், சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.

7 வருட காதல்

7 வருட காதல்

இவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வார்னித் என்பவரை ஏழு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இரண்டு பேர் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு அதிக சினிமா வாய்ப்பில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருக்கிறார்.

மதுக்கடை

மதுக்கடை

கடந்த சில நாட்களுக்கு முன், பெண்கள் மதுக்கடைகளில் வரிசையில் நின்றதை கிண்டலடித்து பதிவு போட்டியிருந்தார். 'இதற்கு முன் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் இங்கு சரியாகக் கடைபிடிக்கப்படுவது போல் உள்ளது. மதுக்கடை முன் தனித்தனி வரிசையில் நிற்கின்றனர்' என பதிவிட்டிருந்தார்.

முடி வெட்டுவாயா?

முடி வெட்டுவாயா?

இந்நிலையில் இப்போது இந்த லாக்டவுன் காரணமாக தனது கணவருக்கு முடி வெட்டிவிடும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். அதில், 'அவர் கடைசியாக என்னிடம் கேட்டுவிட்டார். எனது முடியை வெட்டிவிடுவாயா என்று? வெட்டிவிட்டேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் இதற்கு தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். சிலர், சிறப்பா வெட்டிவிடறீங்க, வேற லெவல் கட்டிங் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X