twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைத் துளி

    By Staff
    |

    நடிகை மனிஷா கொய்ராலாவைக் கடத்த முயன்ற அபு சலீம் கோஷ்டியைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    அபு சலீம் முதலில் தாவூத் இப்ராகிம் கும்பலில் இருந்தான். பின்னர் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டுசெயல்பட்டு வருகிறான். மும்பை திரையுலகத்தினரிடம் வழக்கமாக பணம் கறப்பது இந்தக் கும்பல்களின் வாடிக்கை. அபு சலீம்இப்போது அரபு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் மாறி மாறி வசித்து வருகிறான். அங்கிருந்தபடி தனது சாம்ராஜ்யத்தை நடத்திவருகிறான். தாவூத் பாகிஸ்தானின் அரசு விருந்தினராக இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்களில் ஈடுபட்டுவருகிறான்.

    இந்தக் கும்பல்கள் இந்தி நடிகைகளை மிரட்டி தங்கள் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அழைக்கும்போதுஅழைக்கும் நாட்டுக்கு, இடத்துக்கு நடிகைகள் வர வேண்டும். இல்லாவிட்டால் கொலை மிரட்டல் விடுப்பார்கள்.

    சமீபகாலமாக மனிஷா கொய்ராலாவுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. மும்பையில் இருந்து வெளியேஎங்காவது சென்றுவிட அவர் முடிவு செய்திருந்தபோது தான் பாபா படத்தில் சான்ஸ் கிடைத்தது. இதையடுத்து சென்னை வந்தமனிஷாவை பலத்த பாதுகாப்புடன் ரஜினி தங்க வைத்திருந்தார்.

    மாநில போலீஸ் உதவி தவிர தனியார் ஏஜென்சிகள் மூலமும் மனிஷாவுக்கு 24 மணி நேர பாதுகாப்பு செய்து தந்தார் ரஜினி. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து மனிஷா மும்பை திரும்பிவிட்டார்.

    நேற்று மாலை அபு சலீம் கோஷ்டியைச் சேர்ந்த ஜஸ்பால் சிங், முகம்மத் ஜாவித், சுரேஷ் அரோரா மற்றும் ஒருவன் அடங்கிய 4 பேர்கும்பல் வடமேற்கு மும்பையில் உள்ள லோகன்வாலா பகுதியில் பதுங்கி இருக்கும் விவரம் இவர்களின் எதிர்கோஷ்டி மூலம்போலீசாருக்கு தெரியவந்தது. இவர்கள் மனிஷா கொய்ராலாவைக் கடத்தத் திட்டமிட்டிருப்பதாக இவர்களின் எதிர்கோஷ்டிபோலீசாருக்கு தகவல் தந்தது.

    இதையடுத்து தாதா கும்பலுக்கு கடும் சவாலாக விளங்கி வரும் மும்பை போலீஸ் அதிகாரியான தயாநாயக் தலைமையிலானசிறப்புப் படை அந்தப் பகுதியை சுற்றி வளைத்தது. ஓபராய் கார்டன் பகுதியில் ஒரு மாருதி காரில் பதுங்கியிருந்த இந்த 4பேரையும் போலீசாரின் ஜீப்கள் சுற்றி வளைத்தன.

    இதையடுத்து அவர்களை வெளியே வருமாறு போலீசார் அழைக்க அந்தக் கும்பல் திடீரென போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டது.பூட்டப்பட்ட காரின் கண்ணாடி ஜன்னல்களை துளைத்துக் கொண்டு குண்டுகள் வெளியே சீறின.

    இதை எதிர்பார்த்த போலீசார் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். காரை எல்லா பக்கமும் சூழ்ந்து கொண்டு போலீசார்தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தினர். சில நிமிடங்களில் 4 பேரும் பிணமானார்கள்.

    இவர்களிடம் இருந்த டைரிகள் மற்றும் பிற விவரங்களை ஆராய்ந்தபோது இவர்கள் மனிஷா கொய்ராலாவைக் கடத்தவும்,அதைத் தொடர்ந்து நடிகர் அமீர்கான், லகான் படத்தின் இயக்குனர் அசுதோஸ் கவாரிகர் ஆகியோரைக் கொல்லவும்திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

    லகான் படம் மில்லியன் கணக்கில் வசூல் செய்ததைதயடுத்து அமீர்கானிடம் இந்தக் கும்பல் பல கோடி பணத்தைக் கேட்டுவருகிறது. ஆனால், அமீர்கான் இதைத் தர மறுத்து போலீசாரிடம் புகார் தந்துவிட்டார். இதையடுத்து அவரும் தாதா கும்பலின்டார்கெட் லிஸ்டில் இருக்கிறார். போலீசாரும், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களும் அவருக்கு பாதுகாப்பு தந்து வருகின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X