உதயநிதி-ஹன்சிகாவின் 'மனிதன்' குடும்பத்துடன் பார்க்கலாம்
சென்னை: உதயநிதி, ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் மனிதன் திரைப்படம் தணிக்கையில் 'யூ' சான்றிதழைப் பெற்றிருக்கிறது.
உதயநிதி, ஹன்சிகா, பிரகாஷ் ராஜ், விவேக், ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மனிதன்'.

'ஜாலிஎல்எல்பி' என்ற பெயரில் இந்தியில் வெளியாகி இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தமிழுக்குத் தகுந்தாற்போல மாற்றி எடுத்திருக்கின்றனர்.
'என்றென்றும் புன்னகை' அஹமத் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் 'யூ' சான்றிதழை வழங்கியுள்ளனர்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பின் உதயநிதி-ஹன்சிகா இணைந்து நடித்திருக்கும் படம், அனிருத் பாடல், உதயநிதி-விவேக் கூட்டணி போன்றவற்றால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
மற்றொருபுறம் இப்படத்திற்காவது தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்குமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











