விஜய்யைத் தொடர்ந்து உதயநிதிக்கு உதவிய விஷால்!

By Manjula

சென்னை: உதயநிதியின் 'மனிதன்' தனியார் பேருந்தில் ஒளிபரப்பப்படுவதை அறிந்த விஷால் அதனைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

திருட்டு சிடியை ஒழிக்க விஷால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் இருந்து வந்த தனியார் பேருந்தில் 'தெறி' ஓடுவதைத் தெரிந்து காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுத்தார்.

Manithan Telecast in Private Bus

இந்நிலையில் அவினாசியில் இருந்து வந்த தனியார் பேருந்து ஒன்றில் 'மனிதன்' திரைப்படம் ஓடுவதாக விஷாலுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து விஷால், கார்த்தி இருவரும் போலீசில் புகார் கொடுத்தனர். நடிகர் ஸ்ரீமன் மேற்பார்வையில் மதுரவாயல் அருகே அந்தப் பேருந்தை தடுத்து நிறுத்தி போலீஸ் சோதனை செய்தனர்.

சோதனையில் 'மனிதன்' சிடியைக் கைப்பற்றி மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

என்னுடைய 'மருது' திரைப்படத்திற்கு சிடி வெளியானால் நானே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுப்பேன், என விஷால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X