Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எம்எஸ்வி இசையில் 'மனிதனாக இரு'... ஆடியோ சிடி வாங்கினால் படத்தில் நடிக்க வாய்ப்பு!
'ஆக்ட்அபான் வென்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்' என்ற மும்பையைச் சேர்ந்த பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
திரை இசை சக்ரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் இப்படத்திற்காக 19 பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை இரு பாகங்களாக வெளியிடும் திட்டத்தில் உள்ளனர்.
'மனிதனாக இரு - பாகம் 1'இன் இசை வெளியீடு சமீபத்தில் ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. முதல் பாகத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 'பாசம்' படத்தில் 'உலகம் பிறந்தது எனக்காக' என்ற சூப்பர் ஹிட் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் டி.எம்.எஸ். பாடினார். அதே பாடலின் வரிகளை ஆங்கிலத்தில் 'மனிதனாக இரு - பாகம் 1' இல் எம்.எஸ்.வி. இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.
'மனிதனாக இரு - பாகம் 1' இம்மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து 'மனிதனாக இரு - பாகம் 2' தொடங்க இருக்கிறது. அதில் மீதமுள்ள 9 பாடல்கள் இடம்பெறுகின்றன.
இரண்டாவது பாகத்தில் நடிப்புத் திறமையையோ, பிற தொழில்நுட்ப திறமைகளையோ வெளிப்படுத்த விருப்பப்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'ஆக்ட்அபான் வென்சர்ஸ்' நிறுவனம் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி 'மனிதனாக இரு - பாகம் 1' இன் ஆடியோ சி.டி. வாங்குபவர்கள் அதன் மேலட்டையையும், ஆடியோ சி.டி. வாங்கியதற்கான அத்தாட்சியையும் சமர்ப்பித்தால், திறமையின் அடிப்படையில் 'மனிதனாக இரு - பாகம் 2'இல் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க இப்பட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்!
அட தமாஷ் இல்லீங்க... சீரியஸாகவே இதை அறிவித்து, தங்கள் மெயில் ஐடியையும் வெளியிட்டுள்ளனர்... இமெயில் - [email protected].