twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புலிக்கொடி போர்த்தி உறங்கிய இனமானக் கலைஞன்.. மணிவண்ணன் நினைவு தினம்.. மாநாடு தயாரிப்பாளர் உருக்கம்!

    |

    சென்னை: இப்படியொரு நடிகரை எல்லாம் தமிழ் சினிமா இனிமேல் பார்க்குமா என்பது சந்தேகம் தான். அந்த அளவுக்கு மக்களின் மனங்களை வென்ற நடிகர் மணிவண்ணன் மறைந்த தினம் இன்று.

    வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மணிவண்ணன் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.

    ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை

    மணிவண்ணன் நினைவு தினத்தை முன்னிட்டு மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    பாராதிராஜாவுடன்

    பாராதிராஜாவுடன்

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் வசனகர்த்தாவாகவும் திரைக்கதை ஆசிரியராகவும் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் மணிவண்ணன். 1980 முதல் 82 வரை வெளியான பாரதிராஜாவின் நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனங்களை இவர் எழுதி உள்ளார். மனோபாலா இயக்கத்தில் வெளியான ஆகாய கங்கை படத்திற்கும் இவர் தான் கதையாசிரியர்.

    400 படங்கள்

    400 படங்கள்

    தமிழ் சினிமாவில் துணை நடிகராக நடித்த மணிவண்ணன் நகைச்சுவை நடிகராகவும், வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும், தந்தையாகவும், அண்ணனாகவும் ஏகப்பட்ட படங்களில் பல வித்தியாச நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ் என அனைத்து டாப் ஹீரோக்கள் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

    50 படங்களை இயக்கியவர்

    50 படங்களை இயக்கியவர்

    1982ம் ஆண்டு மோகன் நடிப்பில் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்கி வெற்றி இயக்குநராக மக்கள் மனங்களில் மய்யம் கொண்டார். நூறாவது நாள், சின்னத்தம்பி பெரியதம்பி, புது மனிதன், அமைதிப்படை, ஆண்டான் அடிமை, நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ உள்ளிட்ட 50 படங்களை இயக்கி உள்ளார்.

    மணிவண்ணன் நினைவு தினம்

    மணிவண்ணன் நினைவு தினம்

    1953ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி சூலூரில் பிறந்த மணிவண்ணன் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி தனது 59வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இன்று அவரது 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் மணிவண்ணனையும் அவரது சாதனைகளையும் நினைத்து வருகின்றனர்.

    சுரேஷ் காமாட்சி உருக்கம்

    சுரேஷ் காமாட்சி உருக்கம்

    சினிமாவை தாண்டி அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார் மணிவண்ணன். மேலும், ஈழப் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் அளித்து வந்தவர். இந்நிலையில், அவரது மறைவு தினத்தை முன்னிட்டு மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மணிவண்ணனை நினைத்து உருகி உள்ளார்.

    இனமானக் கலைஞன்

    இனமானக் கலைஞன்

    "புலிக்கொடி போர்த்தி உறங்கிய இனமானக் கலைஞன். இறுதி மூச்சுவரை களப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போராளி... என் முதல் பட இயக்குநர் அய்யா மணிவண்ணன்!! மறக்கவியலா நினைவுகளுக்குள் ஆழ்ந்திருக்கும் நினைவாஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். என்றும் உங்கள் சுரேஷ் காமாட்சி." என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Actor, Director and Story writer Manivannan’s 8th year death anniversary today. Maanaadu producer Suresh Kamatchi put a tribute tweet for Manivannan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X