twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமாவாசையை தந்த மணிவண்ணன்: எங்க மணியா இருக்கீங்க?

    By Siva
    |

    Recommended Video

    மணிவண்ணன் இறந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது- வீடியோ

    சென்னை:இயக்குனர் மணிவண்ணன் இறந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    இயக்குனர், நடிகர் என்று அசத்தியவர் மணிவண்ணன். வில்லன் கதாபாத்திரமாகட்டும், நகைச்சுவை கதாபாத்திரமாகட்டும் சிறப்பாக நடிப்பார். அன்பான அப்பாவாக நடிப்பதில் மணிவண்ணனுக்கு நிகர் மணிவண்ணனே.

    அவர் இறந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது.

    அமாவாசை

    அமாவாசை

    மணிவண்ணன் என்ற பெயரை சொன்னதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது சத்யராஜின் அமாவாசை கதாபாத்திரம் தான். மணிவண்ணன் கண் முன்பே வளர்ந்து அவரையே மணியா என்று அழைப்பார். அந்த அமாவாசை கதாபாத்திரம் இன்றைய சூழலுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துவிட்டது.

    பாரதிராஜா

    பாரதிராஜா

    தனது குருவான பாரதிராஜா ஆனந்த விகடனில் தன்னை பற்றி எழுதிய கட்டுரையை பார்த்துவிட்டு மனமுடைந்தார் மணிவண்ணன். அந்த வருத்தத்தில் இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மணிவண்ணனை பாரதிராஜா கொன்றுவிட்டார் என்று அப்போது பேசப்பட்டது.

    சத்யராஜ்

    சத்யராஜ்

    மணிவண்ணனும், சத்யராஜும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் சேர்ந்து பணியாற்றிய படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவை. பெருந்தன்மையான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மணிவண்ணன் பெயர் போனவர். நிஜத்திலும் பெருந்தன்மையான மனிதராக இருந்தவர்.

    கவலை

    கவலை

    மணிவண்ணனை இழந்து அவரது குடும்பத்தார் கவலையில் உள்ளனர். ஆண்டுகள் ஓடினாலும் அவரின் நினைவு மட்டும் அப்படியே உள்ளது. தந்தையாக நினைத்த மனிதரே தன்னை இப்படி பேசிவிட்டாரே என்ற வருத்தத்தில் சென்றுவிட்டார் மணிவண்ணன்.

    English summary
    It has been five years since Multi talented Manivannan left us.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X