For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒளிமயமான எதிர்காலம்.. தங்கப்பதக்கம் கெட்டப்பில் கலக்கிய ரீல் சிவாஜி.. அசந்துபோன உறவினர்கள்

  |

  கடலூர்: தமிழ்த் திரையுலகின் மாபெரும் கலைஞனாகப் போற்றிப் பாராட்டப்படுபவர் சிவாஜி கணேசன்.

  சிவாஜி மறைந்து 21 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் அவர் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துகிடக்கிறார்.

  இதை நிரூபிக்கும் விதமாக கடலூர் மஞ்சகுப்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் சுவாரஸ்யம் நடந்துள்ளது.

  சிவாஜி பேரை கேட்டதும் பயத்தில் 11 முறை கழிவறைக்கு சென்ற ராதா ரவி... காரணம் தெரியுமா?சிவாஜி பேரை கேட்டதும் பயத்தில் 11 முறை கழிவறைக்கு சென்ற ராதா ரவி... காரணம் தெரியுமா?

  மக்களை கவரும் கலைஞர்கள்

  மக்களை கவரும் கலைஞர்கள்

  அரசியல், சினிமா, விளையாட்டு, வர்த்தகம், விஞ்ஞானம் என எத்தனையோ துறைகள் சார்ந்த பிரபலங்கள் மக்களால் அறியப்படுகின்றனர். ஆனால், அவர்களில் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் மட்டுமே எக்காலத்துக்கும் கொண்டாடப்படுகின்றனர். அவர்களிலும் கூட நடிகர்கள் மீதான மக்களின் அபிமானம் மனதுக்கும் உணர்வுகளுக்கும் உடல்மொழிக்கும் ரொம்பவே நெருக்கமானதாக இருக்கும். இப்படியான நடிகர்களில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் முன்னோடிகளாக காணப்படுவதோடு, இன்றளவும் மக்களால் கொண்டாடப்படுகின்றனர்.

  சிவாஜி என்றொரு ஆளுமை

  சிவாஜி என்றொரு ஆளுமை

  தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்தியாவையும் கடந்து உலகமே கொண்டாடும் மகத்தான கலைஞனாக சிவாஜி அறியப்படுகிறார். அவர் நின்றாலும் நடந்தாலும் சிரித்தாலும் அழுதாலும் அசைவின்றி அப்படியே கிடந்தாலும், சிவாஜியின் உடல்மொழியில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் அசாத்தியமானவை. அவைகளை மாயக்கண்களோடு பார்த்தாலும் அதனுள்ளே மறைந்திருக்கும் நுட்பங்களை யாருமே அவதானிக்க முடியாது. அப்படியெரு மகா கலைஞனை நகலெடுப்பதும் அவரைப் போன்றே நடித்துக் காட்டுவதும் நிச்சயமாக மகா அற்புதம் தான்.

  கண்ணன் வடிவில் சிவாஜி

  கண்ணன் வடிவில் சிவாஜி

  சிவாஜியின் நடிப்பில் கட்டுண்டு கண் மயங்கியவர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும். அதில் ஒருவராக கண்ணன் என்பவரையும் குறிப்பிடலாம். கடலூர் அருகேயுள்ள மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கண்ணன் என்பவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். சிவாஜியின் பரம ரசிகனான கண்ணன், அச்சு அசலாக நடிகர் திலகத்தையே நகலெடுத்து சென்று மணமக்களை வாழ்த்தியது தான், அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  தங்கப்பதக்கம் சிவாஜியின் வாழ்த்து மழை

  தங்கப்பதக்கம் சிவாஜியின் வாழ்த்து மழை

  தங்கப்பதக்கம் சிவாஜியைப் போல கொஞ்சம் நரைத்த முடியுடன் கம்பீரமாக கோட், சூட் அணிந்து மேடையேறிய கண்ணன், அதன்பின்னர் செய்ததெல்லாம் மாயாஜாலம் தான். சிவாஜியின் எமோஷனலான நடிப்புக்கு உதாரணமாக ஒரு படத்தை கூற வேண்டுமானால், தங்கப்பதக்கம் தான் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். அப்படிப்பட்ட எமோஷனல் சிவாஜியை 'பச்சை விளக்கு' படத்தின் கூல் சிவாஜியாக மாற்றி பிரமிக்க வைத்துவிட்டார்.

  மணமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்

  மணமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்

  ஆம்! தங்கப்பதக்கம் சிவாஜி கெட்டப்பில் மேடையேறிய கண்ணன், பச்சை விளக்கு படத்தில் இடம்பெற்ற 'ஒளிமயமான எதிர்காலம்' பாடலை ஒலிக்கவிட்டு, அதற்கேற்றவாறு நளினம் கூட்டியும் நடனமாடியும் திகைக்க வைத்துள்ளார். 'ஒளிமயமான எதிர்காலம்' பாடலை நாகேஷுடன் சேர்ந்து ரயிலை ஓட்டியபடியே பாடியிருப்பார் சிவாஜி. அதுவும் பாடலின் பெரும்பாலான காட்சிகளில் அவருக்கு க்ளோஸ் அப் காட்சிகள் மட்டுமே உண்டு. அதனால் சிவாஜியின் முழுமையான உடல்மொழியை பார்க்க முடியாது. ஆனால், அந்தப் பாடலுக்கு தங்கப்பதக்கம் சிவாஜி கோட், சூட்டுடன் பாடி அசத்தினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை, மேடையேறி மணமக்களை வாழ்த்தி நிவர்த்தி செய்துவிட்டார் கண்ணன். இந்த வீடியோ இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

  English summary
  At the wedding ceremony held at Cuddalore Manjakuppam, Kannan disguised himself as Sivaji and greeted the bride and groom.( கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில், கண்ணன் என்பவர் சிவாஜி போல வேடமணிந்து சென்று மணமக்களை வாழ்த்தினார். இது அங்கிருந்த உறவினர்களை வியப்பில் ஆழ்த்தியது )
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X