TTF: ஆம்பளையா இருந்தா நேர்ல வா.. நான் இறங்குறேன்.. டிடிஎஃப் வாசனை விடாமல் சீண்டும் இயக்குநர் செல்அம்

சென்னை: இணைய உலகம் வளர்ந்த பின்னர் தமிழ் நாட்டில் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மக்கள் மத்தியிலும் நல்ல புகழைப் பெற்றனர். இணையத்தைப் பயன்படுத்தி இன்றைக்கு சமூகத்தில் சிறந்த அடையாளத்துடன் இருப்பவர்களும் உள்ளனர். அதேபோல் மக்களிடம் பிரபலமடையவேண்டும் என்ற நோக்கில் மட்டும் இணையத்தை பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.

அந்த வகையில் தனது பைக் ஒட்டும் திறமையை தனது யூடூயூப் சேனலில் பதிவேற்றி டீன் ஏஜ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் இதற்கு மட்டும் இல்லாமல், சர்ச்சைகளுக்கும் பிரபலமானவர். இவர் குறித்து சினிமா பட இயக்குநர் செல்அம் அண்மையில் அளித்த பேட்டியில் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

manjal veeran chellam ttf vasan

அதாவது டிடிஎஃப் வாசனை வைத்து திரு.வி.க. நகர் பூங்கா படத்தினை இயக்கிய இயக்குநர் செல்அம் படம் இயக்கப்போவதாக அறிவித்தார். மேலும் அந்தப் படத்திற்கு மஞ்சள் வீரன் எனப் பெயர் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மஞ்சள் வீரன் படத்தின் போஸ்டர் 2021ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மஞ்சள் வீரன் படத்தின் வேலைகள் நடந்து வருவதாக பேச்சுகள் அடிபட்ட நிலையில், திடீரென கடந்த வாரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்றார். ஆனால் எதற்காக நீக்கப்படுகிறார் என்பதற்கான காரணத்தை சொல்லவில்லை. இவரது இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சி அளித்தது.

manjal veeran chellam ttf vasan

இது தொடர்பாக தனது யூடூயூப் சேனலில் பேசிய டி.டி.எஃப்.வாசன், இயக்குநர் செல்அம், தன்னை படத்தில் இருந்து நீக்கியதே தனக்கு தெரியாது. இதுபற்றி அவர் ஒரு முறை கூட என்னிடம் பேசவே இல்லை. அதுமட்டுமில்லாமல், அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி இருந்தார். ஆனால், மஞ்சள் வீரன் படத்தின் போட்டோஷூட் மட்டுமே நடந்தது. படப்பிடிப்பு இதுவரை நடக்கவே இல்லை. படபூஜைக்கு கூட நான் தான் பணம் கொடுத்தேன். அவர் என்னை மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கியது தொடர்பாக பேச அவரை பலமுறை தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் என் அழைப்பை எடுக்கவில்லை. நான் செலவு செய்த பணத்தில் எனக்கு ஒரு பைசாக்கூட வேண்டாம். ஆனால், எதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கினார் என்ற காரணத்தை மட்டும் சொன்னால் போதும், பணத்தை வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

manjal veeran chellam ttf vasan

செல்அம்: இந்நிலையில் இயக்குநர் செல்அம் இது தொடர்பாக ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின்போது டிடிஎஃப் வாசனின் நண்பர் அஜீஸ் உடன் நேரடியாக போனில் பேசச்சொன்னார்கள். அப்போது அதனை முதலில் ஏற்க மறுத்த இயக்குநர் டிடிஎஃப் வாசனை மிகவும் மோசமாக விமர்சித்தார். அப்போது அவர் பேசுகையில், " நான் ஏற்கனவே கூறிவிட்டேன். டிடிஎஃப் வாசனுக்கு திராணி இருந்தால், ஆம்பளையாக இருந்தால் நேரில் வரச்சொல்லுங்கள். நான் இறங்குகின்றேன். அனைத்து மீடியாவையும் கூப்பிடலாம். ஒரு தேதியைச் சொல்லுங்கள். அனைவரது முன்னாலும் பேசி விடலாம்.

manjal veeran chellam ttf vasan

போனில் பேசுவது, தமிழ் நாட்டில் இல்லாமல் வேறு எங்கோ இருந்து கொண்டு பேசுவது என இவை எதுவும் வேண்டாம்" என பேசினார். இவரது இந்த பேச்சு டிடிஎஃப் வாசன் ஃபாளோவர்ஸ்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. யூடூயூபரான டிடிஎஃப் வாசனை 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமானவர்.

manjal veeran chellam ttf vasan

தூக்கு: மேலும் போனில் பேசிய டிடிஎஃப் வாசனின் நண்பர் அஜீஸ் பேசுகையில், செல் அம் இயக்குநரை மிகவும் மோசமாக விமர்சித்தார். மேலும் செல் அம் இயக்குநரின் மனைவி தூக்குப் போட்டுக்கச் சென்றார். அப்போது கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியது டிடிஎஃப் வாசன் தான் என அஜீஸ் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் மஞ்சள் வீரன் படத்தின் தொடர்பாக ஒருநாள் கூட படப்பிடிப்பு நடத்தவில்லை எனவும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X