டிடிஎஃப் வாசன் ஒரு குப்பை.. வியூஸ்க்காக என்ன வேணும்னாலும் செய்வான்.. விளாசிய மஞ்சள் வீரன் இயக்குநர்!
சென்னை: யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கப்படுவதாக அந்த படத்தின் இயக்குநர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, வாசன் தன்னிடம் சொல்லாமல் படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்ததை அடுத்து, மஞ்சள் வீரன் இயக்குநர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசனை 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன், மஞ்சள் வீரன் படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை செல் அம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இதைத்தொடர்ந்து மஞ்சள் வீரன் படத்தின் போஸ்டர் 2021ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மஞ்சள் வீரன் படத்தின் வேலைகள் நடந்து வந்த நிலையில், திடீரென செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்றார். ஆனால் எதற்காக நீக்கப்படுகிறார் என்பதற்கான காரணத்தை சொல்லவில்லை.

மஞ்சள் வீரன்: இதுகுறித்து, தனது யூடியூப் சேனலில் பேசிய டி.டி.எஃப்.வாசன், இயக்குநர் செல் அம், என்னை படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது. இதுபற்றி அவர் ஒரு முறை கூட என்னிடம் பேசியது இல்லை. அதுமட்டுமில்லாமல், அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி இருந்தார். ஆனால், மஞ்சள் வீரன் படத்தின் போட்டோஷூட் மட்டுமே நடந்தது. படபூஜைக்கு கூட நான் தான் பணம் கொடுத்தேன்.
ஏமாற்றிவிட்டார்: இதுகுறித்து பேச நான், அவரை பலமுறை தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் என் அழைப்பை எடுக்கவில்லை. வேறு யார் யாரோ போனை எடுத்து சார் பிஸியாக இருப்பதாக கூறுகின்றனர். நான் செலவு செய்த பணத்தில் எனக்கு ஒரு பைசாக்கூட வேண்டாம், ஆனால், எதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கினார் என்ற காரணத்தை மட்டும் சொன்னால் போதும், பணத்தை வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்று பேசி இருந்தார்.
டிடிஎஃப் வாசன் ஒரு குப்பை: இதற்கு பதில் அளிக்கும் வகையில் யூடியூப் சேனலில் பேசிய இயக்குநர் செல் அம், முதலில் டிடிஎஃப் வாசனுடன் பழகும் போது, அவர் தங்கமாக தெரிந்தார். அதனால், நான் அவரை தங்கம் என்றேன். ஆனால், பழக பழகத்தான் அவர் தங்கம் இல்லை குப்பை என்று தெரிகிறது. வேண்டாத பொருளைத்தான் குப்பையில் போடுவார்கள். அதனால் தான் அவரை நான் குப்பையில் போட்டேன். அந்த குப்பையை வீட்டில் வைத்து இருந்தால், வீடு நாரிவிடும். அவரை படத்தில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை என்னிடம் சொல்லி இருக்கலாம் என்று கூறியுள்ளார். அப்படி சொல்வதற்கு கூட தகுதி இல்லாதவர் வாசன் என்பதால் நான் சொல்லவில்லை.
வியூஸ்தான் முக்கியம்: பட பூஜைக்கு செலவு செய்ததாகவும், ஏமாற்றிவிட்டதாகவும் பேசி வீடியோ போட்டு அதிலும் சம்பாதிக்கிறார். வாசன் வியூஸ்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். நான் தான் கடன் வாங்கி செலவு செய்து இப்போது வரைக்கும் அதற்காக வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறேன். எது உண்மை என்று கடவுளுக்கு தெரிந்தால் போதும், பொறுத்து பொறுத்து பார்த்தேன் இனி அவர் திருந்தவே மாட்டார் என்றதால் தான், படத்தில் இருந்து அவரை நீக்கினேன் என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











