மஞ்சப்பை 50வது நாள்... லட்சுமி மேனனைக் கொண்டாடுது கோலிவுட்!

By Veera Kumar

சென்னை: தாத்தா-பேரன் பாசத்தை அடிப்படையாக கொண்டு சிறு பட்ஜெட்டில் வெளியான மஞ்சப்பை திரைப்படம், ரசிகர்களின் ஆதரவால் 50 நாட்களை கடந்து சாதித்துள்ளது.

நாயகி லட்சுமி மேனன் தன்னை ஒரு ராசியான நடிகை என்பதையும் மீண்டும் நிரூபித்துள்ளதால், அவரது கால்ஷீட்டுக்குத் தவம் கிடக்கிறது கோடம்பாக்கம்.

இயக்குநர் சற்குணம் தயாரித்து, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்ட திரைப்படம் 'மஞ்சப்பை'. ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, என்.ராகவன் என்ற புதுமுகம், படத்தை இயக்கியிருந்தார். இவர் சற்குணத்தின் உதவியாளராக இருந்தவர்.

பல கோடி லாபமாம்

பல கோடி லாபமாம்

சமீபத்தில் வெளியான படங்களில் குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த வருவாய் அளித்தது மஞ்சப்பை. தயாரிப்பாளர், சற்குணத்துக்கு சில கோடிகள் லாபம் என்றால், அதை வாங்கி வெளியிட்ட லிங்குசாமிக்கு பல கோடிகள் லாபம் கிடைத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது (ஆனால் நடித்த விமலுக்குதான் பைசா பேரலியாம்!).

நல்ல கருத்து

நல்ல கருத்து

நகரமயமாதலால் கிராமத்து வாழ்க்கை புறக்கணிக்கப்படுவதையும், கிராமத்து மனிதர்களின் உணர்வுகளை நகரவாசிகள் புரிந்துகொள்ளாமல் இருப்பதையும், இந்த படம் பதிவு செய்திருந்தது. நல்ல கருத்துடன், ஜனரஞ்சக காட்சிகளும் இருந்ததால், விமர்சனங்களைத் தாண்டி இந்தப் படம், கடந்த 25ம்தேதியுடன் 50 நாளை எட்டியது.

தொப்புள் காட்சி

தொப்புள் காட்சி

லட்சுமி மேனன் ஹீரோயினாக நடித்த படங்கள் அனைத்துமே இதுவரை வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் பாண்டிய நாட்டை தொடர்ந்து மஞ்சப்பையும் இணைந்துவிட்டதில் லட்சுமியும் ஏக குஷியாக உள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக லட்சுமி மேனன் கவர்ச்சியில் கால் வைத்தார். ஒரு பாடல் காட்சியில் தொப்புள் தெரிய ஆட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். குஞ்சு நைனா, தொந்தி படவா டயலாக்குகளும் புகழ்பெற்றவை.

மேலும் வர வேண்டும்

மேலும் வர வேண்டும்

மஞ்சப்பை அடைந்துள்ள வெற்றி, இதுபோன்ற சமகால பிரச்சினைகளை பேசும் திரைப்படங்கள் அதிக அளவு வெளிவர உதவிகரமாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் நம்புகிறார்கள். இதற்கிடையே இந்த வாரம் பெரிய பட்ஜெட் படங்கள் வந்ததையடுத்து மஞ்சப்பை தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது சரி.. 50 நாள் ஓடுவதே இப்போதெல்லாம் சாதனைதானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X