ஸ்பானிஷ் பட ரீமேக்.. 4 மொழிகளில் உருவாகும் படம்.. 2 வேடங்களில் நடிக்கும் பிரபல ஹீரோயின்!

By

மும்பை: நான்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருவதாக நடிகை மஞ்சரி பாட்னிஸ் தெரிவித்துள்ளார்.

டேனியல் பாலாஜி, நிதின் சத்யா, ராய் லட்சுமி நடித்த 'முத்திரை' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், மஞ்சரி பாட்னிஸ்.

இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர், அடுத்து தமிழில் நடிக்கவில்லை.

அழகான நீயும்

அழகான நீயும்


சிறந்த பாடகியுமான, முத்திரை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில், அழகான நீயும் என்ற பாடலை பாடியிருந்தார். சில இந்திப் பாடல்களையும் பாடியுள்ள இவர், இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது முதன் முறையாக மராத்தி படம் ஒன்றில் அறிமுகமாகிறார்.

ஜூலியாஸ் ஐஸ்

ஜூலியாஸ் ஐஸ்

இது, ஸ்பானிஷ் படமான ஜூலியாஸ் ஐஸ் (Julia's Eyes) என்ற படத்தின் ரீமேக் ஆகும். தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. மராத்தியில் உருவாகும் படத்தில் நடிகை மஞ்சரி இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார். புஷ்கர் யோக் ஹீரோவாக நடிக்கிறார்.

உன் பார்வையில்

உன் பார்வையில்

அவருக்கும் இரண்டு வேடம் மராத்தியில் இதற்கு அத்ருஷ்யா (Adrushya) என்று டைட்டில் வைத்துள்ளனர். தமிழுக்கு, உன் பார்வையில் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதில் நடிப்பது பற்றி நடிகை மஞ்சரி, மராத்தியில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சவாலான ஒன்று

சவாலான ஒன்று

அவர் மேலும் கூறும்போது, 'இரண்டு வேடங்களில் நடிப்பது சவாலான ஒன்று. சவாலை சிறப்பாக செய்ய விரும்புகிறேன். எனது மராத்தி மொழி வழக்குக்கும் பயிற்சி எடுத்து வருகிறேன். இதில் என கேரக்டருக்காக சில ஆய்வுகளை செய்திருக்கிறேன். இயக்குனரும் ஹீரோவும் எனக்கு அதிக உதவி செய்து வருகிறார்கள்' என்றார்.

விரும்பி ரசிப்பார்கள்

விரும்பி ரசிப்பார்கள்

இதன் கதை வித்தியாசமானது. கண்டிப்பாக ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள் என்கிறார் மஞ்சரி. இந்தப் படத்தை, பிரபல ஒளிப்பதிவாளர் கபீர் லால் இயக்குகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். இதன் பெங்காலி பதிப்பில், ரிதுபர்னா சென் குப்தா, தெலுங்கு பதிப்பில் இஷா சாவ்லா நடிக்கின்றனர்.

காயத்ரி சங்கர்

காயத்ரி சங்கர்

தமிழில், காயத்ரி சங்கர் நடிக்கிறார். இவர் 18 வயது, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், ரம்மி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பெங்காலி மற்றும் மராத்தி படங்களின் ஷூட்டிங் டேராடூனில் தொடங்கியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. நான்கு பதிப்பையும் கபீர் லால் இயக்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X