இன்ஸ்டாவில் இருந்து போட்டோவை நீக்கிய மஞ்சிமா..திருமணம் முடிவான பின்பு ஏன் இப்படி?

சென்னை : நடிகை மஞ்சிமா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை திடீரென நீக்கி உள்ளார்.

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வந்தன.

நடிகை மஞ்சிமா மோகனன்

நடிகை மஞ்சிமா மோகனன்

நடிகை மஞ்சிமா விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இவர் பழம் பெரும் நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனுடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர் இவர்கள் இருவரின் காதல் விவகாரம் வெளியில் தெரிந்த போதும், இருவரும் வாய்திறக்காமல் இருந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி விட்டதாக தெரிவித்தனர்.

திருமண ஏற்பாடுகள் தீவிரம்

திருமண ஏற்பாடுகள் தீவிரம்

இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து தங்களது காதலை உறுதிப்படுத்தினர். இவர்களுக்கு நவம்பர் 28ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இருவீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண அழைப்பிதழ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமண அழைப்பிதழ் திரை உலக பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

புகைப்படம் நீக்கம்

புகைப்படம் நீக்கம்

இந்நிலையில், நடிகை மங்சுமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பழைய புகைப்படங்களை திடீரென நீக்கியுள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், இந்த தளம் மக்களுடன் உரையாடுவதற்கு ஏற்ற தளம். இது எந்த அளவிற்கு அழகானதோ, அந்த அளவிற்கு ஆபத்தானது. அதனால் அந்த தளத்தில் இருந்த பழைய புகைப்படங்களை நீக்கியுள்ளேன். தற்போது என்னுடைய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் இருப்பதை தவிர்க்கிறேன். இருப்பினும் விரைவில் புகைப்படம் பதிவிடுவேன் என்று கூறியுள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனியாக இருந்த அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்து விட்டு, கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை மட்டுமே வைத்துள்ளார். திருமணம் நெருங்கி வரும் இந்த நேரத்தில் எதற்காக இப்படி பழைய புகைப்படங்களை நீக்கியதற்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X