கல்யாணத்துல கூட மனசு கஷ்டப்பட்டேன்.. ஹாப்பி மூடையும் கெடுத்துட்டாங்க.. மஞ்சிமா மோகன் வேதனை!

சென்னை: கவுதம் கார்த்திக்கை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை மஞ்சிமா மோகன் சில தினங்களுக்கு முன்னர் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இரு வீட்டார் சம்மதம் தெரிவித்த நிலையில், காதலை அறிவித்த இருவரும் உடனடியாக இந்த திங்கட்கிழமை தங்களது திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி விட்டனர்.

ஆனால், சந்தோஷமாக திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கூட மனக் கஷ்டத்தில் வாடியதாக நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சிம்பு படத்தில்

சிம்பு படத்தில்

பழம்பெரும் ஒளிப்பதிவாளரான விபின் மோகனின் மகள் தான் மஞ்சிமா மோகன். மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த இவர், கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சத்ரியன், இப்படை வெல்லும் படங்களில் நடித்த மஞ்சிமா மோகன் கடந்த 2019ம் ஆண்டு வெளியான தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக் உடன் முதன் முறையாக இணைந்து நடித்தார்.

3 ஆண்டுகள் ரொமான்ஸ்

3 ஆண்டுகள் ரொமான்ஸ்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக தேவராட்டம் படத்தில் நடித்த மஞ்சிமா மோகன் அவருடன் நண்பராக நெருக்கமானார். அந்த படம் முடிந்த பின்னர், நடிகை மீது தனக்கு காதல் ஏற்பட்டதை உணர்ந்த கவுதம் கார்த்திக் அவரிடம் லவ் ப்ரபோஸ் செய்ய, இரண்டு நாட்கள் யோசித்த நடிகை மஞ்சிமா மோகன் அதன் பின்னர் ஓகே சொல்லி உள்ளார்.

கவுதம் - மஞ்சிமா திருமணம்

கவுதம் - மஞ்சிமா திருமணம்

3 ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக இருவரும் காதலித்து வருவதாக அறிவித்தனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த நவம்பர் 28ம் தேதி நெருங்கிய சினிமா பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் சூழ கோலாகலமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

பாடி ஷேமிங்

பாடி ஷேமிங்

நடிகை மஞ்சிமா மோகன் உடல் எடை அதிகமாக இருக்கிறது என நெட்டிசன்கள் அவர் படங்களில் நடித்த போதும், போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போதும் அவரது பதிவுக்கு கீழ் சென்று பாடி ஷேமிங் செய்துள்ளனர். ஆனால், மணமேடையில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருக்கும் போது கூட மஞ்சிமா மோகனை சிலர் உருவ கேலி செய்ததை அறிந்து மிகவும் வருத்தப்பட்டதாக தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார் மஞ்சிமா மோகன்.

உடல் எடையை குறைப்பேன்

உடல் எடையை குறைப்பேன்

தனது உடல் எடை தனக்கு எந்த வகையிலும் பாரமாக இல்லை என்றும், கேலி, கிண்டல் செய்பவர்களுக்காக ஒரு போதும் எனது இயல்பை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். ஆனால், ஒரு வேளை தொழில் ரீதியாக உடல் எடையை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் தனது உடல் எடையை தாராளமாக குறைக்க முயற்சி செய்வேன் என நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஹனிமூன் எப்போ

ஹனிமூன் எப்போ

திருமணம் முடிந்த நிலையில், இன்னமும் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஹனிமூனுக்கு செல்லவில்லை. கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விடுமுறையை முன்னிட்டு வெளிநாட்டுக்கு ஹனிமூனுக்கு செல்ல இருவரும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X