நீங்க சிங்கிளா –கமிடெட்டா ?...வேற லெவல் பதில் கொடுத்த மஞ்சிமா மோகன்

சென்னை : குழந்தை நட்சத்திரமாக நடிப்பு வாழ்க்கையை துவக்கிய மஞ்சிமா மோகன், மலையாளத்தில் 2015 ல் ரிலீசான ஒரு வடக்கன் செல்ஃபி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்தார்.

Recommended Video

LOVE FAILURE ஆனவர்களுக்கு என்னோட ADVICE | ACTRESS MANJIMA MOHAN EXPLAINS| FILMIBEAT TAMIL

இரண்டாவது படமே கோலிவுட்டில் சிம்புவிற்கு ஜோடியாக, அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தார். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கி இருந்தார். இந்த படம் சுமாரான வசூலை பெற்றாலும் சிம்பு மற்றும் மஞ்சிமா மோகனுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அதற்கு பிறகு தமிழில் சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஜீவாவுடன் களத்தில் சந்திப்போம், விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், எஃப்ஐஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்களை உற்சாகப்படுத்திய மஞ்சிமா

ரசிகர்களை உற்சாகப்படுத்திய மஞ்சிமா

லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கும் ரசிகர்களிடம் உற்சாகப்படுத்த, ஒன் இன் மில்லியன் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை ஆன்லைனில் நடத்தினார் மஞ்சிமா. புதிய திறமைகளை ஊக்குவிப்பதற்காக இந்த நிகழ்ச்சியை அவர் நடத்தினார்.

நீங்கள் சிங்கிளா

நீங்கள் சிங்கிளா

இதே போன்று சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். Ask me anything என்ற தலைப்பில் ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சிங்கிளா அல்லது கமிடெட்டா என ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பற்றி கேட்டார்.

மீம் போட்டு பதில் சொன்ன மஞ்சிமா

மீம் போட்டு பதில் சொன்ன மஞ்சிமா

அதற்கு அட்டகாசமாக மீம் ஒன்றை பதிவிட்டு பதிலளித்தார் மஞ்சிமா. அதில், இரு குழந்தைகள் முத்தமிட்டு கொண்டிருப்பது போலவும், இந்த காட்சியை தூரத்தில் இருந்து ஒரு சிறுவன் கோபத்துடன் பார்ப்பதை போன்றும் இருந்தது.

இது தான் என் நிலைமை

இது தான் என் நிலைமை

அந்த மீம் உடன், ஒவ்வொருவரும் காதலில் விழுவார்கள். நான் இப்படி தான் இருக்கேன் என பதிலளித்துள்ளார் மஞ்சிமா. இவரின் இந்த பதிலை பலரும் ரசித்து, பாராட்டி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சிமா, பள்ளி மாணவர்களிடம் மன ஆரோக்யம் தொடர்பான நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதை வலியுறுத்தி நிறைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

மஞ்சிமாக்கு இது தான் பிடிக்குமாம்

மஞ்சிமாக்கு இது தான் பிடிக்குமாம்

வாழ்க்கையில் எந்த 3 விஷயங்கள் முக்கியம் என மற்றொரு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, வாழ்க்கையில் 3 முக்கியமான விஷயங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம். குடும்பம் மற்றும் தொழில். சினிமாவை தவிர தனக்கு கேக் செய்ய ரொம்ப பிடிக்கும் எனவும் அதில் ஆர்வம் அதிகம் எனவும் மஞ்சிமா கூறி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X