Don't Miss!
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Finance
TVS: லாபத்தில் 22 சதவீதம் உயர்வு.. ஆனால்..!!
- News
கிளம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வரை.. வருகிறது சென்னை மெட்ரோ! பிரஷரே இல்லாமல் ஜாலியாக போகலாம்
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
3 ஆண்டுகள் காதலித்தோம்… ஆனால் திருமணத்திற்கு முன் லிவிங் டூ கெதர்?: மனம் திறந்த மஞ்சிமா மோகன்
சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகினார்.
தேவராட்டம் படத்தில் நடித்த போது அவருக்கும் மஞ்சிமா மோகனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
தற்போது அவர்களின் காதல் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்துள்ள நிலையில், லிவிங் டூ கெதர் குறித்து மஞ்சிமா மோகன் மனம் திறந்துள்ளார்.
பார்த்திபன்,கௌதம் கார்த்திக்கின் பட தலைப்பு வெளியானது… வித்தியாசமான பெயரா இருக்கே !

கெளதம் – மஞ்சிமா காதல்
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்துடன் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் கார்த்திக். அவரது மகன் கெளதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய 'கடல்' திரைப்படம் மூலம் ஹீரோவானார். மூன்றாவது தலைமுறை நடிகராக திரைத்துறையில் தடம் பதித்துள்ள கெளதம் கார்த்திக், கடல், வை ராஜா வை, ரங்கூன், தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களில் நடித்துள்ளார். தேவாரட்டம் படத்தில் நடித்து வந்தபோது நடிகை மஞ்சிமா மோகனுடன் காதலில் விழுந்தார் கெளதம்.

நடந்து முடிந்த காதல் திருமணம்
'தேவராட்டம்' படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் என செய்திகள் வெளியாகின. ஆனால், இருவரும் அமைதியாக இருந்து வந்த நிலையில், அக்டோபர் 31ம் தேதி தங்களின் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். அதன் பின்னர் கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் அடுத்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஜோடி கடந்த 28ம் தேதி மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் ஜோடிக்கு சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

மனம் திறந்த மஞ்சிமா மோகன்
கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவரது திருமண புகைப்படங்கள் தொடர்ந்து வரைலாகி வருகின்றன. திருமணத்திற்குப் பின்னரும் இருவரும் எடுத்துக்கொண்ட செம்ம க்யூட்டான போட்டோஸ் ட்ரெண்டிங்கில் உள்ளன. முன்னதாக கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் 3 ஆண்டுகள் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக சொல்லப்பட்டன. தற்போது அது குறித்து மஞ்சிமா மோகன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "கொரோனா லாக்டவுன் காலங்களில் நான் என் வீட்டில் தனியாக தான் இருந்தேன், கெளதம் கார்த்திக் அவரது அம்மாவுடன் தான் வசித்து வந்தார்" எனக் கூறியுள்ளார்.

எல்லாம் அவர்கள் வேலை தான்
மேலும், "நாங்கள் இருவரும் எப்போதாவது ஒன்றாக வெளியில் செல்வதை பார்த்து மீடியாவில் தான் இப்படி தகவலை பரப்பிவிட்டார்கள். ஆனால், நாங்கள் லிவிங் டூ கெதரில் இல்லை" மறுத்துள்ளார். தற்போது கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவரும் திருமணம் செய்துகொண்டதால், இந்த லிவிங் டூ கெதர் வதந்தியும் முடிவுக்கு வந்துள்ளது. சிம்புவுடன் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் நடித்திருந்த மஞ்சிமா மோகன், தொடர்ந்து விஷ்ணு விஷாலின் 'FIR' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல், கெளதம் கார்த்திக் தற்போது சிம்புவுடன் பத்து தல படத்தில் நடித்துள்ளார்.

நயன் – விக்கி தம்பதி வாழ்த்து
கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனுக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், நயன் - விக்கி தம்பதி அழகான பூங்கொத்து அனுப்பி விஷ் செய்திருந்தனர். ரசிகர்களும் இந்த ஜோடிக்கு தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இந்நிலையில், கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவரும் எங்கே ஹனிமூன் போகவுள்ளர்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.