விஷ்ணு விஷால் படத்தை மிகவும் நம்பும் சிம்பு ஹீரோயின்.. என்ன மாதிரியான ரோல் என்கிற ரகசியம் லீக்!

சென்னை: சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் ராசாளியாக பறந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகை மஞ்சிமா மோகன், அடுத்ததாக எஃப்.ஐ.ஆர் படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மஞ்சிமா மோகன், மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'ஒரு வடக்கன் செல்ஃபி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து, சத்ரியன், தேவராட்டம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

விஷ்ணு விஷால் படம்

விஷ்ணு விஷால் படம்

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி வரும் ஃபைஸல் இப்ராஹிம் ரய்ஸ் (அ) எஃப்.ஐ.ஆர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மஞ்சிமா மோகன். லாக்டவுன் காரணத்தால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போய் இருக்கிறது.

லீக்கான ரகசியம்

லீக்கான ரகசியம்

வழக்கமாக வரும் பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் போல இல்லாமல், இந்த படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் ரொம்பவே போல்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். மேலும், இந்த படம் தமிழ் சினிமாவில் தனக்கொரு நல்ல வரவேற்பை மீண்டும் பெற்றுத் தரும் என இந்த படத்தின் ரிலீசுக்காக ரொம்பவே காத்திருப்பதாக தனது கதாபாத்திரம் பற்றிய ரகசியத்தை அவரே கசியவிட்டுள்ளார்.

கெளதம் மேனன் சிஷ்யன்

கெளதம் மேனன் சிஷ்யன்

இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ள மனு ஆனந்த், கெளதம் மேனனின் முன்னாள் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், தற்போது, தீவிரவாதத்தை மையமாக வைத்து மிரட்டலான ஒரு படத்தை இயக்கி உள்ளார்.

நீண்ட நாள் பழக்கம்

நீண்ட நாள் பழக்கம்

அச்சம் என்பது மடமையடா படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே நாயகி மஞ்சிமா மோகன் மற்றும் எஃப்.ஐ.ஆர் பட இயக்குநர் மனு ஆனந்த் இருவருக்கும் நல்ல நட்பு உருவாகி இருக்கிறது. அதன் காரணமாகவே தனது முதல் படத்தில் மிரட்டலான ரோலில், அவரை நாயகியாக நடிக்க வைத்திருக்கிறார்.

ரைசா வில்சன்

ரைசா வில்சன்

முன்னதாக எஃப்.ஐ.ஆர் படம் குறித்து பேசிய பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சன், இயக்குநர் மனு ஆனந்த் பற்றியும், விஷ்ணு விஷாலின் நடிப்புத் திறமை குறித்தும் வெகுவாக பாராட்டி இருந்தார். இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரைசா வில்சனுக்கும் இந்த படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் மிகுந்த ரோல் தான் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில

மேலும் சில

எஃப்.ஐ.ஆர் படம் மட்டுமின்றி நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் களத்தில் சந்திப்போம் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். லாக்டவுன் முடிந்த பிறகு, மஞ்சிமா கோலிவுட்டில் கொடிகட்டி பறக்கப் போவது உறுதி தான் போல..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X