»   »  விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மஞ்சிமா மோகன்?

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மஞ்சிமா மோகன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் டி.ராஜேந்தருடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். 'தனி ஒருவன்' புகழ் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

Manjima Mohan Team up with Vijay Sethupathi

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து படக்குழு ''இப்படத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் கிட்டதட்ட சம்மதித்து விட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும்'' என்றும் தெரிவித்துள்ளனர்.

ரத்தின சிவாவின் 'றெக்க' படத்துக்குப்பின் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

சிம்புவுடன் இணைந்து நடித்த 'அச்சம் என்பது மடமையடா' இன்னும் வெளியாகவில்லை எனினும், அடுத்தடுத்த வாய்ப்புகள் மஞ்சிமாவைத் தேடிச்செல்வது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Manjima Mohan Team up with Vijay Sethupathi for his Next Movie. The Official Announcement Expected Soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil