கணவரை பிரிந்து வாழும் பிரபல நடிகரின் மகள்... சர்ச்சைக்குள் சிக்கிய நடிகை.. குழப்பும் மஞ்சு லட்சுமி!

ஹைதராபாத்: திரையுலக பிரபலங்கள் இடையே விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு என பிடித்த இணையர்கள் பிரிவதாக அறிவிப்பது ரசிகர்களுக்கு மட்டும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஷாக் ஆன செய்தியாக இருக்கிறது. சில சமயங்களில் விவாகரத்து குறித்த வதந்தி செய்திகளும் பரவலாக காணப்படுகிறது. தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமி விவாகரத்து பெற்றுள்ளதாக செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளது. அதுகுறித்த அவரது விளக்கத்தையும் இதில் காணலாம்.

அறிவுரை: சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்தி வந்துவிட்டால் போதும், சோஷியல் மீடியாக்களுக்கு றெக்கை முளைத்துவிடுகின்றன. அதைப் பற்றி கருத்துச் சொன்னால்தான் அன்றைய பொழுதே போனது மாதிரி நெட்டிசன்களுக்கு ஆகிவிடுகிறது. விவாகரத்து தொடர்பான தகவல்கள் காதுக்கு எட்டியவுடன் அறிவுரைப் புராணங்களை சிலர் ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கு ஒரு எண்ட் இல்லையா என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

Manju lakshmi divorce Manju lakshmi divorce Mohan babu

விவாகரத்து : நடிகர் தனுஷ், ஜெயம் ரவி விவாகரத்து செய்திகள் பூதாகரமாக வெடித்தன. ஆனால், கடந்தாண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா விவாகரத்து செய்தி தமிழ் ரசிகர்களை கலங்கடித்தது. இந்த செய்தியறிந்து ரஹ்மானும் மிகவும் நொந்து போனார். பின்னர் அவரது மகன் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்தவர் மோகன் பாபு. இவரது மகள் மஞ்சு லட்சுமி தனது கணவரை விட்டு பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து தெலுங்கு மீடியாக்களும் பலவித கருத்துக்களை தெரிவித்தன.

திறமை: மோகன் பாபுவின் மகளாக தெலுங்கு திரையுலகில் அறிமுகம் கிடைத்தாலும், தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், தொகுப்பாளர் என பன்முகத்திறமையை வளர்த்துகொண்டார் மஞ்சு லட்சுமி. அண்மையில், தெலுங்கை தாண்டி தமிழ், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். காற்றின் மொழி படத்தில் இவரது கதாப்பாத்திரம் பாராட்டை பெற்றது. ஏற்கெனவே மோகன் பாபு மற்றும் அவரது மகன்கள் இடையே சொத்து பிரச்சனை நடந்து வருகிறது. இதனிடையே மஞ்சு லட்சுமி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இதுவரை இதற்கான காரணம் தெரியவில்லை என செய்திகள் வெளியானது.

Manju lakshmi divorce Manju lakshmi divorce Mohan babu

விளக்கம்: விவாகரத்து குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், மஞ்சு லட்சுமி இதற்கான விளக்கத்தை சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், எனது கணவர் ஸ்ரீனிவாஸ் வெளிநாட்டில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறார். நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம், சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் பொறுப்பற்ற தன்மையுடன் இருக்கிறது. இதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். நடிகை என்றாலே சிறப்பாக பேசுவார்கள், நான் நடிகரின் மகள் சினிமாத்துறையில் இருக்கிறேன் என்னை பற்றி எழுதாமல் இருப்பார்களா?

Manju lakshmi divorce Manju lakshmi divorce Mohan babu

நானும் எனது கணவரும் எங்களது விருப்பப்படி வாழ்ந்து வருகிறோம். மற்றவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்களுக்காக எனது மகிழ்ச்சியை கெடுத்துகொள்ள விரும்பவில்லை. இப்போது என் மகள் அவரது தந்தையுடன் இருக்கிறார் என மஞ்சு லட்சுமி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X