விவாகரத்துக்கு மனு - திலீப்பை நிரந்தரமாகப் பிரிந்தார் மஞ்சு வாரியர்!
கொச்சி: மலையாள நடிகர் திலீப்பை விவாகரத்து செய்யத் தயாராகிறார் அவர் மனைவி நடிகை மஞ்சு வாரியர். இதன் மூலம் இவர்களின் 15 ஆண்டுகால திருமண உறவு முடிவுக்கு வருகிறது.
மலையாள நடிகர் திலீப்புக்கும், நடிகை மஞ்சு வாரியருக்கும் 1998-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மீனாட்சி என்ற பெண் குழந்தை உள்ளது.

மஞ்சு வாரியருக்கும் திலீப்புக்கும் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
சினிமாவில் நடிக்கக் கூடாது என்ற திலீப்பின் தடையையும் மீறி, இப்போது மஞ்சு வாரியர் சினிமாவில் நடிக்கிறார்.
பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இருவருக்கும் சமரசம் ஏற்படுத்த சிலர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இதைத் தொடர்ந்து இருவரும் நிரந்தரமாக பிரிய முடிவு செய்துள்ளார்கள். விவாகரத்துக்கு மனு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தனது பாஸ்போர்ட்டில் கணவர் பெயரை நீக்கிவிட்டு, மஞ்சு வாரியர் என்றே மாற்றிக் கொண்டுள்ளார். தனது முகவரியாக பெற்றோர் வீட்டு முகவரியையே அதில் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











