ஒரு போன்தான் பண்ணினேன்...வந்துடுச்சு எல்லாம்... லேடி சூப்பர்ஸ்டாரை பாராட்டும் மேக்கப் கலைஞர்!

By

கொச்சி: ஒரு ஃபோன் செய்து உதவி கேட்டதும் அனைத்தையும் லேடி சூப்பர்ஸ்டார் வழங்கினார் என்று தெரிவித்துள்ளார் பிரபல மேக்கப் கலைஞர்.

Recommended Video

கொரோனா விழிப்புணர்வு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டார் நடிகை மஞ்சு வாரியர்! - வீடியோ

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். கேரள சினிமாவின் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.

நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார். அவரை விவாகரத்து செய்த பிறகு சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழில் மஞ்சுவாரியர்

தமிழில் மஞ்சுவாரியர்

தமிழில் நடிக்காமல் இருந்த அவர், வெற்றிமாறனின் அசுரன் மூலம் தமிழுக்கு வந்தார். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக பச்சையம்மாள் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து நல்ல கதைகள் கிடைத்தால் தமிழில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

படப்பிடிப்பு ரத்து

படப்பிடிப்பு ரத்து

இப்போது, மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக, த பிரீஸ்ட், ஹாரார் திரில்லர் படமான சதுர்முகம், தனது சகோதரர் மதுவாரியர் இயக்கும் படம் என நடித்து வருகிறார். கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியா முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரிப்பு

நாளுக்கு நாள் அதிகரிப்பு

சினிமா பிரபலங்களும் வீட்டுக்குள் தங்கள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

திருநங்கைகள்

திருநங்கைகள்

இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியாக, நடிகர், நடிகைகள் நன்கொடை வழங்கி வருகின்றனர். தெலுங்கு நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில், ஊரடங்கு உத்தரவு காரணமாக அன்றாட தேவைகளுக்கு கஷ்டப்படும் திருநங்கைகளுக்கு, நடிகை மஞ்சு வாரியர் உதவியுள்ளார்.

த்வயா அமைப்பு

த்வயா அமைப்பு

கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு திருநங்கைகளுக்கென த்வயா (Dwaya) என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புக்கு நடிகை மஞ்சு வாரியர், அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதை பிரபல திருநங்கை மேக்கப் கலைஞர் ரெஞ்சு ரெஞ்சிமர் (Renju Renjimar) பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ரூ. 5 லட்சம் நிதி

ரூ. 5 லட்சம் நிதி

அவர் அதில், 'மஞ்சு வாரியருக்கு போன் செய்து த்வயா உறுப்பினர்கள் கஷ்டப்படுவதாகச் சொன்னேன். அத்யாவசிய பொருட்கள் தேவையாக இருப்பதைத் தெரிவித்தேன். அவர் வேறேதையும் கேட்கவில்லை. உடனடியாக, அரிசி உள்ளிட்ட பொருட்களை ஏற்பாடு செய்து வழங்கினார்' என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, சினிமா தொழிலாளர்களுக்காக அவர் ரூ.5 லட்சம் நிதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X