சுருட்டை முடி, ஹேர் கலரிங்... நிவின் பாலி படத்துக்காக ஸ்டைலாக மாறிய நடிகை மஞ்சு வாரியர்

By

Recommended Video

பாட்டு பாடி நடனம் ஆடி அசத்திய மஞ்சு வாரியர்

கொச்சி: நிவின் பாலி நடிக்கும் படவெட்டு படத்துக்காக ஸ்டைலாக மாறியிருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர்.

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

மம்மூட்டி ஜோடியாக

மம்மூட்டி ஜோடியாக

இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இதற்கிடையே அவர் மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்கிறார். மம்மூட்டியுடன் அவர் நடிப்பது இதுவே முதன்முறை. இது பல வருட கனவு என்றும் அவர் கூறியிருந்தார். அந்தப் படத்துக்கு த பிரீஸ்ட் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

சதுர்முகம்

சதுர்முகம்

மோகன் லாலின் மரக்கார், சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள ஜேக் அண்ட் ஜில் ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளன. இதற்கிடையே சதுர்முகம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரஞ்சித் கமலா சங்கர் -ஷாலி வி இயக்குகின்றனர்.

நிவின் பாலி

நிவின் பாலி

அடுத்து தனது அண்ணன் மது வாரியர் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிவின் பாலியின் படவெட்டுப் படத்துக்காக, தனது தோற்றத்தை ஸ்டைலாக மாற்றியுள்ளார் மஞ்சு வாரியர். இந்தப் படத்தை நடிகர் சன்னி வெயின் தயாரிக்கிறார். லிஜூ கிருஷ்ணா இயக்குகிறார். 'அருவி'யில் நடித்த அதிதி பாலன் ஹீரோயினாக நடிக்கிறார்.

ஸ்டைல் லுக்

ஸ்டைல் லுக்

இந்தப் படத்தில் மஞ்சுவாரியர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தனது ஹேர் ஸ்டைலை, சுருள் முடியாக அவர் மாற்றியுள்ளார். ஹேர் கலரிங்கும் செய்துள்ளார். ஸ்டைலாக இருக்கும் அவரது லுக்கை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இது அவருக்கு அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சுருள் முடியுடன் இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X