பஸ் ஸ்டாண்டுக்கு ஹாயாக வந்து அரசு பஸ்சில் ஏறிய மஞ்சு வாரியர்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

By

திருவனந்தபுரம்: நடிகை மஞ்சு வாரியர் பேருந்து நிலையத்துக்குள் ஹாயாக வந்து அரசு பேருந்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம் மத்திய பேருந்து நிலையத்துக்குள், நேற்றுமுன் தினம் காலை, சிவப்பு நிற கார் ஒன்று வந்தது. அங்கு கூடியிருந்த பயணிகள் அந்த காரை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

Recommended Video

Asuran 100th Day Celebration | Rohini Theatre | Dhanush Family

பின்னர் ஓரமாக நிறுத்தப்பட்ட அந்த காரில் இருந்து, சுடிதார் அணிந்த பெண் ஒருவர் காதில் இயர் போன் மாட்டியபடியும் பேக்கை சுமந்தபடியும் இறங்கினார்.

கூட்டம் அதிகம்

கூட்டம் அதிகம்

தலையை குனிந்தபடி சென்ற அவர், புறப்படத் தயாராக இருந்த அரசு பேருந்து ஒன்றின் படியில் ஏறினார். அதில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏறிய அந்தப் பெண் சில நொடிகளில் இறங்கினார்.

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

பின்னர் இதே போல இன்னொரு முறை செய்தார். பிறகுதான் அந்தப் பெண் மஞ்சுவாரியர் என்பது அங்கு கூடியிருந்தவர்களுக்குத் தெரியவந்தது. யாருக்கும் தெரியாமல் ஓரமாக நின்று அதை சிலர் படம் பிடிப்பதும் அது, சதுர்முகம் படத்தின் ஷூட்டிங் என்பதும் தெரிந்தது.

5 நிமிடத்தில்

5 நிமிடத்தில்

இதனால் அந்த பகுதி பரபரப்பானது. இதையடுத்து வந்த காரிலேயே ஏறிச் சென்றார் மஞ்சுவாரியர். இதெல்லாம் வெறும் ஐந்து நிமிடத்துக்குள்ளே முடிந்துவிட்டது.

தமிழில் அசுரன்

தமிழில் அசுரன்

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், வெற்றிமாறனின் அசுரன் மூலம் தமிழில் அறிமுகமானார். அவர் இப்போது நடிக்கும் மலையாளப் படம், சதுர்முகம். இதை ரஞ்சித் கமலா சங்கர் -ஷாலி வி இயக்குகின்றனர். ஹாரர் திரில்லர் படமான இதில் தொழிலதிபராக நடிக்கிறார் மஞ்சு வாரியர்.

ஆக்‌ஷன் காட்சிகள்

ஆக்‌ஷன் காட்சிகள்

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது நடந்த விபத்தில் நடிகை மஞ்சுவாரியார் காயமடைந்தார். இதையடுத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மீண்டும் ஷூட்டிங்

மீண்டும் ஷூட்டிங்

இந்நிலையில், காயம் சரியாகி இப்போது படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டிருக்கிறார்.
இதன் ஷூட்டிங் கடந்த ஒருவாரமாக திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X