Manju Warrier: மீண்டும் தமிழ் படத்தில் கமிட்டான மஞ்சு வாரியர்.. அதுவும் அந்த இயக்குநர் படத்திலா?
சென்னை: மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக அசத்தி வரும் நடிகை மஞ்சு வாரியர் தனுஷின் அசுரன் மற்றும் அஜித்தின் துணிவு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகி உள்ளார் மஞ்சு வாரியர் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் மஞ்சு வாரியர்.

மலையாள நடிகை: 1995ல் மலையாளத்தில் வெளியான சாக்ஷியம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சு வாரியர். மோகன்லால், திலீப் என மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சு வாரியர் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், தொடர்ந்து மலையாள படங்களிலும் சமீப காலமாக தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

அசுரன், துணிவு: தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் நடித்து கோலிவுட்டிலும் அறிமுகமானார் மஞ்சு வாரியர்.
44 வயதாகும் மஞ்சு வாரியர் இந்த ஆண்டு எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவான துணிவு படத்திலும் ஹீரோயினாக நடித்து மாஸ் காட்டினார்.
மிஸ்டர் எக்ஸில் மஞ்சு வாரியர்: துணிவு படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பாரா? என கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது மிஸ்டர் எக்ஸ் எனும் படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
நடிகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்தி நடித்து வரும் அந்த படத்தில் தான் முக்கிய வேடத்தில் கமிட் ஆகி உள்ளார் மஞ்சு வாரியர்.

எஃப்ஐஆர் பட இயக்குநர்: விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், கவுதம் மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் தான் மிஸ்டர் எக்ஸ் படத்தை இயக்குகிறார்.
மஞ்சிமா மோகன் கணவர் கவுதம் கார்த்தி நடிக்கும் இந்த படத்தில் தற்போது மஞ்சு வாரியர் லீடு ரோலில் ஒப்பந்தம் ஆகி உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











