அசுரன் அப்டேட்ஸ்.. தனுஷுக்கு ஜோடியாகும் மலையாள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியார்!

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகிறார் மலையாள நடிகை மஞ்சு வாரியார்.

சென்னை: அசுரன் படத்தில் தனுஷின் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

வடசென்னை' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அசுரன். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார்.. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. வரும் 26ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மலையாள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியார், அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நடிப்பு:

மீண்டும் நடிப்பு:

நடிகர் திலீப்பைத் திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதை தவிர்த்த மஞ்சு வாரியார், தற்போது கணவரை விவாகரத்து செய்து விட்டார். இதனால் மலையாள படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். தமிழில் அசுரன் அவரது முதல் படம் ஆகும்.

அசுரன் நாயகி:

அசுரன் நாயகி:

அதோடு, தனுஷை விட ஐந்து வயது மூத்தவர் மஞ்சு வாரியர். இதனால் அசுரன் படத்தில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. விரைவில் அவரது கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடசென்னை 2ம் பாகம்:

வடசென்னை 2ம் பாகம்:

ஏற்கனவே வடசென்னை இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என தனுஷ் - வெற்றிமாறன் அறிவித்திருந்தினர். அதற்கு முன்னர் இப்படம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தவிர, தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

தனுஷ் இயக்கம்:

தனுஷ் இயக்கம்:

பவர்பாண்டி படத்தைத் தொடர்ந்து இப்படத்தை அவரே இயக்குகிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நாகர்ஜூனா, சரத்குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வரலாற்றுப் படம்:

வரலாற்றுப் படம்:

வரலாற்றுப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடைவெளியில் தான் தனுஷ்‘அசுரன்' படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X