தனது அண்ணன் மது இயக்குனர் ஆகும் படம்... என்ன ரோலில் நடிக்கிறார் 'அசுரன்' மஞ்சு வாரியர்?
Recommended Video
சென்னை: தனது சகோதரர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார் மஞ்சு வாரியர்.
நடிகை மஞ்சு வாரியர், திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற பின், மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு அசுரன் மூலம் நிறைவேறியது.

மம்மூட்டி ஜோடியாக
தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் அவர் வாழ்ந்திருந்தார். இப்போது அவர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக, த பிரீஸ்ட் என்ற பட்த்தில் நடிக்கிறார். 'மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பல வருட கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது' என்று கூறியிருந்தார் மஞ்சு. இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.

மது வாரியர்
மஞ்சு வாரியரின் அண்ணன் மது வாரியர். மலையாளத்தில் த கேம்பஸ், ரோமியோ, ஹலோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் இப்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு லலிதம் சுந்தரம் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்த டைட்டிலை மம்மூட்டியும் மோகன்லாலும் அறிமுகப்படுத்தினர்

தொழிலதிபராக
இதில் நடிகை மஞ்சு வாரியர் தொழிலதிபராக நடிக்கிறார். அவர் ஜோடியாக பிஜூ மேனன் நடிக்கிறார். இருவரும் ஏற்கனவே சில படங்களில் சேர்ந்து நட்டித்துள்ளனர். தீப்தி சந்தி, திலீஷ் போத்தன், சைஜூ குரூப், ஜரினா வஹாப் உட்பட பலர் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஸ்கிரிப்டை பிரமோத் மோகன் எழுதியுள்ளார்.

சவாலான வேடம்
இதன் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. 'இயக்குனர் ஆகவேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்தப் படத்துக்காக கடந்த மூன்றரை வருடமாக வேலை பார்த்திருக்கிறேன். மஞ்சுவாரியருக்கு சவாலான வேடம். ஷூட்டிங் தொடங்கும் தினத்தை ஆர்வமாக எதிர்பாத்துக் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் மது வாரியர்.


Click it and Unblock the Notifications











