'நயன்தாராவின் அர்ப்பணிப்பு இருக்கே..' லேடி சூப்பர் ஸ்டாரை புகழும் இன்னொரு லேடி சூப்பர் ஸ்டார்!

By

சென்னை: பிரபல நடிகை நயன்தாராவின் அர்ப்பணிப்பை அப்படி பாராட்டுகிறார், இன்னொரு லேடி சூப்பர் ஸ்டார்.

Recommended Video

Nayanthara Vignesh Shivan marriage bells | திருமண தேதி

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள், நடிகை மஞ்சு வாரியரை. நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

ஜோதிகா நடிப்பில்

ஜோதிகா நடிப்பில்

15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது. இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை, அசுரன் மூலம் நிறைவேறியது. வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

நிவின் பாலி

நிவின் பாலி

இதற்கிடையே அவர் மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக த பிரீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மம்மூட்டியுடன் அவர் நடிக்கும் முதல் படம் இது. ' அவருடன் நடிக்க வேண்டும் என்பது பல வருட கனவு. இப்போது நனவாகி உள்ளது' என்றும் மஞ்சு கூறியிருந்தார். தனது அண்ணன் மது வாரியர் இயக்கும் படத்திலும் நிவின் பாலியின் படவெட்டு என்ற படத்திலும் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பற்றி கூறியுள்ளார். அதில், 'நயன்தாராவின் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அவர் நடிப்பு எனக்குப் பிடிக்கும். கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பது, ஒரு மலையாளியாக எனக்கும் பெருமையான விஷயம்.

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

சினிமா துறையில் பெண்களாலும் வலிமையாக இருக்க முடியும் என்பதை நிரூபித்திருக் கிறார் அவர். நடிகை நயன்தாராவின் தொழில் அணுகுமுறை வரவேற்கத்தக்கது. அதுவும் எனக்குப் பிடித்தமான ஒன்று. நடிப்புத் தொழிலில் அவரது அர்ப்பணிப்பை நான் விரும்புகிறேன். அதைப் போல இருக்க வேண்டும் எனவும் நினைகிறேன்' என்று மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X