கொச்சியில் பைக்கில் சுற்றிய மஞ்சு வாரியர்...இணையத்தை கலக்கும் ஃபோட்டோக்கள்
கொச்சி : நடிகை மஞ்சு வாரியர், தனது லேட்டஸ்ட் படமான சத்ருமுகம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் கொச்சியில் ஷகீர் சுபனுடன் மஞ்சு வாரியர் பைக்கில் சுற்றி உள்ளார். மல்லு டிராவலர் என்ற புகழ்பெற்ற யூட்யூப் சேனலின் உரிமையாளர் தான் இந்த ஷகீர் சுபன்.
மஞ்சு வாரியர் பைக்கில் சுற்றிய வீடியோக்களும், ஃபோட்டோக்களும் தான் தற்போது சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹெல்மெட் அணிந்த படி, உற்சாகமாக மஞ்சு, பைக்கில் பயணம் செய்துள்ளார். இருந்தும் சாலையில் சென்ற பலரும் அவரை கவனித்து கையசைத்துள்ளனர்.

மஞ்சு வாரியரின் எதிர்பாராத இந்த வருகை ரசிகர்கள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்கள் கோஷமிட்டபடி, மஞ்சுவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். மஞ்சு வாரியர் பைக்கில் சென்ற வீடியோ தற்போது டிரெண்டிங் ஆகி உள்ளது.
மலையாளத்தில் வெளியாகும் முதல் டெக்னோ ஹரார் படமான சத்ருமுகம், ஏப்ரல் 8 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இரண்டு நண்பர்களை மையமாகக் கொண்டது தான் இந்த படத்தின் கதை. இதில் சிசிடிவி பிசினஸ் செய்பவராக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்த படத்தை ரஞ்சித் கமல ஷங்கர் இயக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











