அட அவரா இது? நம்பவே முடியலையே.. பிரபல நடிகையின் குழந்தை பருவ போட்டோ.. வைரலாகும் ஸ்டில்!

By

கொச்சி: பிரபல நடிகையின் குழந்தை பருவ போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள், நடிகை மஞ்சு வாரியரை. நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

ஜோதிகா நடிப்பில்

ஜோதிகா நடிப்பில்

15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது. இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை, அசுரன் மூலம் நிறைவேறியது.

பச்சையம்மாள்

பச்சையம்மாள்

வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக அவர் நடித்திருந்தார். பச்சையம்மாள் என்ற அவர் கேரக்டர் இந்தப் படத்தில் பேசப்பட்டது. இதற்கிடையே அவர், மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப் போயிருக்கிறது.

லலிதம் சுந்தரம்

லலிதம் சுந்தரம்

மம்மூட்டி ஜோடியாக த பிரீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மம்மூட்டியுடன் அவர் நடிக்கும் முதல் படம் இது. 'அவருடன் நடிக்க வேண்டும் என்பது பல வருட கனவு. இப்போது நனவாகி உள்ளது' என்றும் மஞ்சு வாரியர் கூறியிருந்தார். தனது சகோதரர் மது வாரியர் இயக்கும் லலிதம் சுந்தரம் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார் மஞ்சு.

நிவின் பாலி

நிவின் பாலி

இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து நடிகர் நிவின் பாலியின் படவெட்டு என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே மஞ்சு வாரியருக்கு நேற்று, பிறந்த நாள். இதையடுத்து ஏராளமான திரைபிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Recommended Video

மஞ்சு வாரியர் திறமை கண்டு வியந்த கீர்த்தி சுரேஷ்! - வீடியோ
குழந்தைப் பருவம்

குழந்தைப் பருவம்

வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்த அவருக்கு, அவர் சகோதரரும் இயக்குனருமான மது வாரியரும் வாழ்த்து தெரிவித்தார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் மஞ்சு குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, லலிதம் சுந்தரம் படத்தின் டிசைனையும் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X