நட்சத்திர தம்பதி மகள். இன்ஸ்டாவில் அறிமுகமான மினி லேடி சூப்பர்ஸ்டார்.. வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்!

By

கொச்சி: பிரபல நட்சத்திர தம்பதியின் மகள், இன்ஸ்டாவில் என்ட்ரியாகி இருக்கிறார். அவரை ரசிகர்கள், மினி லேடி சூப்பர் ஸ்டார் என்று வர்ணித்துள்ளனர்.

Recommended Video

96 படத்துல நான்தான் JANU வா நடிக்க வேண்டியது | MANJU WARRIER | ASURAN | V-CONNECT | FILMIBEAT TAMIL

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கில் டாப்பில் இருக்கிறார் அவர்.

தனது தாய்மொழியான மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா.

குடும்பத்தை மட்டும்

குடும்பத்தை மட்டும்

ஆனால், அங்கு லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பது நடிகை மஞ்சு வாரியரை. நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின், சினிமாவில் நடிக்காமல் இருந்தார் மஞ்சு வாரியர். குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த அவருக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார்.

கம்பேக் வரவேற்பு

கம்பேக் வரவேற்பு

கடந்த சில வருடங்களுக்கு முன் திலீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? ஹிட்டானது. இது தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது.

பச்சையம்மாள் கேரக்டர்

பச்சையம்மாள் கேரக்டர்

இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை, அசுரன் படம் மூலம் நிறைவேறியது. வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில், தனுஷ் ஜோடியாக அவர் நடித்திருந்தார். அவருடைய பச்சையம்மாள் கேரக்டர் பரபரப்பாகப் பேசப்பட்டது.

படவெட்டு படம்

படவெட்டு படம்

இப்போது, மம்மூட்டி ஜோடியாக, த பிரீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மம்மூட்டியுடன் அவர் நடிக்கும் முதல் படம் இது. சதுர்முகம், தனது அண்ணன் மது வாரியர் இயக்கும் படம் நிவின் பாலியின் படவெட்டு என்ற படங்களில் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்.

மினி மஞ்சு வாரியர்

மினி மஞ்சு வாரியர்

இதற்கிடையே இவர் மகள் மீனாட்சி திலீப், இப்போது சோசியல் மீடியாவில் என்ட்ரியாகி இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் கணக்குத் தொடங்கி இருக்கும் அவர், முதல் பதிவாக தனது புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவரை வரவேற்றுள்ள நெட்டிசன்ஸ், அவரை மினி மஞ்சு வாரியர் என்று வர்ணித்துள்ளனர்.

நெருங்கிய தோழி

நெருங்கிய தோழி

இவர் சோசியல் மீடியாவுக்கு வந்துள்ளதை மீனாட்சியின் நெருங்கிய தோழியும் நடிகையுமான நமீதா புரமோத், தனது பக்கத்தில் போட்டோவுடன் டேக் செய்துள்ளார். இதையடுத்து ரசிகர்களும் நெட்டிசன்களும் அவர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். வாழ்த்துகள், இன்னும் நிறைய புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X