‘அசுரன்‘ நாயகி மஞ்சுவாரியரின் உயிருக்கு ஆபத்து… இயக்குநரின் பதிவால் பதற்றம்!
கேரளா : அசுரன் கதாநாயகி மஞ்சுவாரியரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரபல இயக்குநர் சனல் குமார் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான மஞ்சுவாரியர், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின்பு இருவருக்கும் விவாகரத்தானதை அடுத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து பிசியாக நடித்து வருகிறார்.

உயிருக்கு ஆபத்து
இந்நிலையில், பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சனல் குமார், நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் சிலரின் கஸ்டடியில் இருப்பதாகவும், அவரது மேலாளர்கள் பினீஷ் சந்திரன் மற்றும் பினு நாயர் ஆகியோரை நான் அணுகினேன் ஆனால்,என்னால் அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை.இதுவரை மஞ்சு வாரியரோ அல்லது சம்பந்தப்பட்ட யாரோ பதிலளிக்கவில்லை.

சீரியசான விஷயம்
மஞ்சு வாரியரின் மௌனம் எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. நான் wcc_cinema wcc, அமைப்புக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் இந்த விஷயத்தில் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள். இது மிக சீரியசான விஷயம். ஆனால், பலர் இதை நகைச்சுவையாக நினைக்கிறார்கள். கேரளாவில் உள்ள ஊடகங்களும் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாதது போல் இருப்பது மேலும் பயத்தை அதிகரிக்கிறது.

ஊடகங்கள் அமைதி
நான் எழுப்பிய பிரச்சனை தேசிய அளவில் புகழ் பெற்ற ஒரு திரைப்பட நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் பற்றியது என்பதால், தேசிய ஊடகங்கள் இந்த பிரச்சனையை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சனல் குமார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவினால் ரசிகர்கள் கவலை அடைந்து வருகின்றனர்.
Recommended Video

ஆக்டிவாக இருக்கிறார்
ஒருபக்கம் மஞ்சுவாரியர் கடத்தப்பட்டுவிட்டதாகவும் ,உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், நடிகை மஞ்சுவாரியர், தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். ஆனால், மஞ்சு எங்கு இருக்கிறார் என்ற எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை,


Click it and Unblock the Notifications











