Manju Warrier :அஜித்தை பாலோ செய்யும் மஞ்சு வாரியர்.. சூப்பரான விஷயமா இருக்கே!
சென்னை : நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் இவர் நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் திலீப்பை கடந்த 1998ம் ஆண்டில் திருமணம் செய்த மஞ்சு வாரியர், கடந்த 2015ம் ஆண்டில் விவாகரத்து பெற்று விட்டார்.
திலீப் மற்றும் மஞ்சு வாரியருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். இவருடைய புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

நடிகை மஞ்சு வாரியரின் பைக் பயணம் : நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும், மலையாள பின்னணி பாடகியாகவும் நடன ஆசிரியராகவும் பல்வேறு தளங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார். தன்னுடைய பள்ளிக் காலத்திலேயே சிறந்த நடனமாடுபவராக இருந்த மஞ்சு வாரியர், தொடர்ந்து பல நடன நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார்.
இதனிடையே இதன்மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 1995ம் ஆண்டில் சாக்ஷ்யம் என்ற மலையாளப் படத்தின்மூலம் இவர் அறிமுகமானார். தொடர்ந்து சில ஆண்டுகள் பிசியான மற்றும் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக இருந்த மஞ்சு வாரியர், கடந்த 1998ம் ஆண்டில் பிரபல மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.
தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டில் திலீப்பிடம் விவாகரத்து பெற்று பிரிந்த மஞ்சு வாரியர், மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற படத்தின்மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்தப் படமே தமிழில் ஜோதிகாவுக்கும் ரீஎன்ட்ரி படமாக அமைந்தது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டில் வெளியான லூசிபர் என்ற படத்தில் நடித்த மஞ்சு வாரியர், தொடர்ந்து தமிழில் அசுரன் படத்திலும் நடித்து என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர் நடித்த துணிவு படம் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படமும் இவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் போல்டாக நடித்திருந்த இவர், நிஜத்திலும் அஜித்துடன் இணைந்து லடாக் பகுதியில் பைக் ரைட் சென்றிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் BMW பைக் வாங்கியுள்ளார். அதில் அவர் ரைட் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதில் அவர் பைக் ரைடு செல்வதற்கான கெட்டப்புடன் காணப்படுகிறார். நடிகர் அஜித் தொடர்ந்து பைக் பயணங்களை மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது அவரது பாணியை மஞ்சு வாரியரும் பின்பற்றி வருகிறார்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் மஞ்சு வாரியர், தன்னுடைய நடன நிகழ்ச்சிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுவரும் தன்னுடைய பிட்னஸ் சீக்ரெட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதனிடையே பைக் ரைட்களிலும் தற்போது கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். இவரது நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ஆயிஷா என்ற படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications











