vettaiyan audio launch: ரஜினி சாரை பார்ப்பேனு கனவிலும் நினைக்கல.. மஞ்சு வாரியர் நெகிழ்ச்சி!
சென்னை: ஞானவேல் இயக்கியிருக்கும் 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ரானா, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது.
இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மஞ்சு வாரியர் அனைவரும் அசந்து போகும் வகையில் அழகான தமிழில் பேசி அசத்தினார்.

மஞ்சுவாரியர் பேச்சு: நான் முதலில் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏன் என்றால், இந்த மேடையில் நான் நிற்பதற்கு காரணம் நீங்க எனக்கு கொடுத்த அன்பும், ஆதரவும் மட்டும் தான். தமிழில் நான் நடித்து வெளியானது இரண்டே இரண்டு படம் மட்டும் தான், ஒன்று என் முதல் படம் அசுரன், தனுஷூடன் நடித்தது. இரண்டாவது படம் துணிவு அஜித்துடன் நடித்தது. இந்த இரண்டு படத்திற்கும் நீங்க கொடுத்த வரவேற்பு எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்து இருக்கு. இப்போ என்னுடைய மூன்றாவது படம் வேட்டையன் என்று சொல்லுவதில் ரொம்ப பெருமையா இருக்கு.
சிறப்பான கூட்டணி: ஒரு நடிகரை பொருத்தவரைக்கும் ஒரு சிறந்த கூட்டணில் படம் பண்ணுவதுதான் பெரிய சந்தோஷமா இருக்கும். ஞானவேல் சாரின் ஜெய்பீம் படம் பார்த்ததில் இருந்து அவரின் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையா இருந்தேன். நீங்களே வேட்டையன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. அதுமட்டுமில்லாமல், பெரிய பெரிய படங்களை தயாரிக்கும் லைக்காவின் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.
சூப்பரான பாடல்: அனிருத் வேட்டையன் படத்தில் மீண்டும் இசையால் மாயாஜாலத்தை காட்டி இருக்கிறார். மனசிலாயோ பாடல் இணையத்தில் எந்த அளவிற்கு ஹிட்டடித்து வருகிறது. இந்த பாட்டை எப்படி நீங்க ரசித்து ரசித்து பார்த்து வருகிறீர்களோ அதே போலத்தான் நாங்களும் ரசித்து ரசித்து டான்ஸ் ஆடினோம். அந்த பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் வருகிறது. அதுமட்டுமில்லாமல் தீப்தி எனக்கு எனர்ஜியான வாய்சை கொடுத்து இருக்கிறார்கள் இதற்காக அவருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
திரையில் மாயாஜாலம்: வேட்டையன் படத்தின் நாயன் தலைவர் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். திரையில் மாயாஜாலம் காட்டுவது ஒரு விஷயம் என்றால், ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள். நீங்க நடிக்கிற படங்கள் மட்டுமில்லாமல் மேடையில் நீங்க பேசுவதை நான் ரசித்து கேட்டு இருக்கிறேன். நீங்க சிம்பிளாத்தான் பேசுவீங்க... ஆனால், அதன் கருத்து ஆழமானமாக இருக்கும். நீங்க வாழ்க்கையில் இரண்டு பேருக்குத்தான் பயப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கீங்க, ஒன்று கடவுள், மற்றொன்று நல்லவர்கள். இவையெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ என் வாழ்க்கையில் நான் முன்னேறி வருவதற்கு உதவி செய்து இருக்கு.
கனவில் நினைக்கல: நான் ரஜினி சாரை நேரில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைச்சு பார்க்கவில்லை. ஆனால், அவர் கூட பேசி இருக்கேன், நடிச்சு இருக்கேன், ஒரு அழகான படம் பண்ணி இருக்கேன். அவர் கூட சேர்ந்து டான்ஸ் கூட ஆடி இருக்கேன். அவரோட ஸ்டைலை என் கண்ணால பார்த்தேன். இது எல்லாத்திற்கும் வேட்டையன் தான். அந்த வேட்டையன் உருவாகுவதற்கு எது காரணமான இருந்ததோ அதற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று மஞ்சுவாரியர் அந்த இசைவெளியீட்டு விழாவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications