முதல்ல தனுஷ், இப்ப விஜய் சேதுபதி... பரபர மகிழ்ச்சியில் நம்ம பச்சையம்மாள்

By

சென்னை: மலையாளப் படத்தில் நடிகை மஞ்சு வாரியர், விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அசுரன். இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை மஞ்சு வாரியர்.

Manju Warrier to romance Vijay Sethupathi in Malayalam Movie

நடிகர் திலீப்பை விவகாரத்து செய்த பின் மீண்டும் நடிக்கத் தொடங்கிய மஞ்சு வாரியர், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட மலையாளப் படங்களில் நடித்துவந்தார். தமிழில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால், நல்ல கேரக்டருக்காகக் காத்திருந்தார்.

இந்நிலையில் அசுரன் படத்தில் நடிக்க வெற்றிமாறன் அழைத்ததும் நடித்தார். அந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக, பச்சையம்மாள் என்ற கேரக்டரில் வாழ்ந்திருந்தார். இதையடுத்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கிடையே விஜய் சேதுபதி ஜோடியாக அவர் நடிக்க இருக்கிறார்.

மலையாள கதாசிரியர் ஆர்.ஜே.ஷான். கேர் ஆஃப் சாயிராபானு என்ற மலையாளப் படத்துக்கு இவர் ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார். இதில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்த ஷான், இப்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின். விஜய் சேதுபதி ஹீரோ. பிஜூமேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் அடுத்த வருடம் ஏப்ரலில் தொடங்குகிறது. தமிழ், மலையாளத்தில் இந்தப் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது.

தனது முதல் தமிழ்ப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர், இப்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பதால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X