விடுதலை 2 படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி இருக்காம்.. மீண்டும் அந்த ஹீரோயினை புக் செய்த வெற்றிமாறன்!

சென்னை: ஏற்கனவே விடுதலை முதல் மற்றும் விடுதலை இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் முடிந்ததாக சொல்லப்பட்ட நிலையில், விடுதலை 3ம் பாகத்தையே வெற்றிமாறன் உருவாக்கி விடுவார் போல தெரிகிறது.

விடுதலை 2 படத்திற்காக மீண்டும் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், விஜய்சேதுபதியின் போர்ஷனை டெவலப் செய்துள்ளாராம் வெற்றிமாறன்.

அப்படி டெவலப் செய்ததில் தற்போது விஜய்சேதுபதிக்கு ஒரு ஹீரோயினையும் கொண்டு வந்திருக்கிறார் என்றும் அசுரன் படத்தில் நடித்த நடிகையையே மீண்டும் களமிறக்கி உள்ளார் வெற்றிமாறன் என தகவல்கள் கசிந்துள்ளன.

Manju Warrier will onboard for Vetrimarans Viduthalai part 2?

விடுதலையில் மூழ்கிய வெற்றிமாறன்: இயக்குநர் வெற்றிமாறன் இப்போதைக்கு விடுதலை 2 படத்தை விட்டு வெளிவர மாட்டார் என்றே தெரிகிறது. அந்த அளவுக்கு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை செதுக்கி வருகிறாராம். நடிகர் சூரியை வைத்து விடுதலை முதல் பாகத்தை எடுத்த போது, விஜய்சேதுபதி கேமியோவாக உள்ளே நுழைந்த நிலையில், அவரை வைத்தே இரண்டாம் பாகம் உருவானது.

சூரியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் ஆடையே இல்லாமல் கூட விஜய்சேதுபதி நடித்திருந்த காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது அவருக்கும் ஒரு ஜோடி படத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Manju Warrier will onboard for Vetrimarans Viduthalai part 2?

மஞ்சு வாரியர் தான் ஜோடி: விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடித்த நிலையில், பெருமாள் வாத்தியாரான விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியரை வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலமாகத்தான் மஞ்சு வாரியர் தமிழ் சினிமாவுக்கே வந்த நிலையில், விடுதலை 2 படத்திலும் மஞ்சு வாரியரை நடிக்க வைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அவருக்கும் அந்த சீன் இருக்குமா?: துணிவு படத்தில் இந்த ஆண்டு தூள் கிளப்பும் ஆக்‌ஷனில் நடித்து மிரட்டிய மஞ்சு வாரியர் விடுதலை 2 படத்தில் நடித்தால் அவருக்கும் நிர்வாண காட்சி இருக்குமா? என்கிற கேள்வியை சினிமா வட்டாரத்திலேயே சிலர் எழுப்பி உள்ளனர்.

விடுதலை படத்திலேயே ஹீரோயின் பவானிஸ்ரீயையே நிர்வாணமாக நடித்தது போன்ற சீட்டிங் ஷாட் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதே போன்ற காட்சிகள் மஞ்சு வாரியருக்கும் இருக்குமா? அவரது மறைவால் தான் விஜய்சேதுபதி மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கிறாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X