மண்ணைக் கவ்விய மஞ்சு வாரியரின் படம்.. ஃபூட்டேஜ் படத்தின் ட்விட்டர் விமர்சனம்

சென்னை: க்ரைம் திரில்லர் பாணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் 'ஃபுடேஜ்'. இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஃபுடேஜ். இப்படத்தை, மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட்ன் கீழ் பினீஷ் சந்திரன் தயாரித்துள்ளார். அஸ்வெகீப்சர்ச்சிங் இசைக்குழுவின் பாடல்களும், சுஷின் ஷியாமின் பின்னணி இசை அமைக்கப்பட்டுள்ளது. பிரபல எடிட்டரான ஸ்ரீதரன், ஷப்னா முகமதுவுடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதையை எழுதி இயக்கி உள்ளனர்.

footage manju warrior twitter review

சர்ச்சையான போஸ்டர்: இந்த படத்தில் இருந்து நாயர் விசாக்கை கதாநாயகியை கட்டிப்பிடித்து இருப்பது போல அதிரடியான போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த போஸ்டரைப் பார்த்த பலர் அது மஞ்சுவாரியர் என்றும், இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின. கடைசியில் அது மஞ்சுவாரியர் இல்லை, இது காயத்ரி அசோக் என்பது தெரியவந்தது. இந்த படத்தில் மஞ்சுவாரியர் நடித்து இருப்பதாலும் இந்த குழப்பம் ஏற்பட்டது.

படத்தின் கதை: ஃபூடேஜ் படம் ஒரு க்ரைம் திரில்லர் படமாகும். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் யூடியூப் தம்பதிகள், தங்களின் அடுக்குமாடி கட்டிடத்தில் நடக்கும் மர்மங்களை பின் தொடர்ந்து செல்கின்றனர். அப்போது, அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒரு மர்மமான பெண்ணான மஞ்சு வாரியரை பின்தொடர்கிறார்கள். அதன் பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளதான் படத்தின் கதை. இப்படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர், விஷக் நாயர், காயத்ரி அசோக் உட்பட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஒரே குழப்பம்: மர்மப் பெண்ணாக அறிமுகமான மஞ்சு வாரியர், கடைசிவரையிலும் மர்மமாகவே உள்ளார். ஏனெனில் அவரது கதாபாத்திரம் மிகவும் குறைவாகவே எழுதப்பட்டது படத்தில் அப்பட்டமாக காட்டப்படுகிறது. மேலும், படத்தில் மஞ்சுவாரியருக்கு ஒரு வசனமும் இல்லை. இதனால், அவள் ஊமையாக இருக்கிறாளா அல்லது கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறாளா என்பது படம் பார்ப்பவர்களுக்கு தெரியவில்லை.

அபத்தமான காட்சிகள்: அதுமட்டுமில்லாமல், இக்கட்டான ஆபத்தான நேரத்தில் கூட அந்த யூடியூப் ஜோடிகள் கேமராவை விடாதது அபத்தமாக இருந்தது. மகேஷிண்டே பிரதிகாரம், கும்பலங்கி இரவுகள் மற்றும் வைரஸ் உட்பட பல வெற்றிப்படத்தின் எடிட்டரான சைஜு. இயக்குநராக இதில் கோட்டை விட்டு விட்டார் என்று இணையவாசிகள் கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X