என் வயித்துல பொறந்த ராட்சசி.. வனிதாவுக்கு சாபம்விட்ட மஞ்சுளா.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: மறைந்த நடிகை மஞ்சுளா தான் உயிரோடிருக்கும் போது தனது மகள் வனிதாவுக்கு சபாம்விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைலாகி வருகிறது.

நடிகை மஞ்சுளா 1969 ஆம் ஆண்டில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இதைத்தொடர்ந்து 1971 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ரிக்சாக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

1970களில் பல படங்களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், கமல்ஹாசன், ரஜனிகாந்த் எனப் பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார்.

மூத்த மகள் வனிதா

மூத்த மகள் வனிதா

விஜயகுமாருக்கு இவர் இரண்டாவது மனைவி ஆவார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பிள்ளைகள். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மூத்த மகளான நடிகை வனிதா, குடும்பத்தாருடன் தகராறு செய்தார்.

பரபரப்பான குடும்பத்தகராறு

பரபரப்பான குடும்பத்தகராறு

தனது தந்தை விஜயகுமார், தனது தங்கையின் கணவர் ஹரி, தனது அண்ணன் அருண்விஜய் ஆகியோர் தனது மகனை தன்னிடம் இருந்து பிரித்து தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

பெத்த வயிறு பத்தி எரியுது

பெத்த வயிறு பத்தி எரியுது

இதைத்தொடர்ந்து நடிகர் விஜயகுமாரும் அவரது மனைவி மஞ்சுளா விஜயகுமாரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய மஞ்சுளா இப்படி ஒரு ராட்சசி என் வயிற்றில் பிறந்தான்னு நினைக்கும்போது, பெத்த வயிறு பத்தி எரியுது. என் கணவரை பற்றியோ எனது மகன் அருண் விஜயை பற்றியோ, எனது மருமகன் ஹரியை பற்றியோ ஒரு வார்த்தை பேசினாலும் அழிந்துதான் போவாள் என சாபமிட்டார்.

காலமான மஞ்சுளா

காலமான மஞ்சுளா

இதைத்தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மஞ்சுளா திடீரென உயிரிழந்தார். இவர் தனது வீட்டில் கட்டிலில் இருந்து கீழே வீழ்ந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.

பிக்பாஸில் வனிதா

வனிதாவுக்கு மஞ்சுளா சாபமிட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக ஹவுஸ் மேட்ஸ்களை வனிதா படுத்தும்பாடு அப்படி.

திட்டாதவரே கிடையாது

திட்டாதவரே கிடையாது

சண்டை மூட்டியாகவும் சண்டைக்காரியாகவும் பிக்பாஸ் வீட்டில் வலம் வருகிறார் வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களில் அவரை திட்டாதவரே கிடையாது. அந்த அளவுக்கு பெயரை கெடுத்துக்கொண்டார் வனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X