Actor Dhanush: தனுஷுடன் இணையும் மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர்.. தயாரிப்பு யாரு தெரியுமா?
சென்னை: கடந்த சிலர் தினங்களுக்கு முன்பாக மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழகத்திலும் டப்பிங் இல்லாமலேயே வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சிறப்பான கதைக்களம் இருந்தால் அதற்கு மொழி ஒரு தடையாக இருக்காது என்பதை இந்த படம் நிரூபித்து வருகிறது. படம் தற்போது 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்த படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்று வருகிறார் இயக்குனர் சிதம்பரம். இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
அடுத்ததாக கோபுரம் பிலிம்ஸ் சார்பில் மதுரை அன்பு தயாரிப்பில் நடிகர் தனுஷை வைத்து சிதம்பரம் படம் இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. வித்தியாசமான ஜானர்களில் தொடர்ந்து நடித்துவரும் தனுஷ், சிதம்பரம் இயக்கத்தில் எந்த மாதிரியான கதைக்களத்தில் நடிப்பார் என்பது குறித்து தற்போதே ரசிகர்கள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் கூட்டணி கண்டிப்பாக மேஜிக்கை நிகழ்த்தும் என்றும் எதிர்பார்க்கலாம்.

மஞ்சுமெல் பாய்ஸ் படம்: தன்னுடைய ஒரே படத்திலேயே சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளார் இயக்குனர் சிதம்பரம். சர்வைவல் திரில்லராக அவரது இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான மலையாள படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படத்தில் நாயகி கூட இல்லாமல் ஏராளமான ரசிகர்களை ஒரே இடத்தில் கட்டி போட முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். படம் வெளியாகி சில தினங்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. குணா படத்தின் கண்மணி அன்போடு பாடல் மற்றும் குணா குகை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை குறிப்பாக தமிழ் ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

தொடரும் பாராட்டுக்கள்: சில நண்பர்கள் இணைந்து கொடைக்கானலுக்கு செல்வதும் அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையையும் மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் சிதம்பரம். படம் கமல்ஹாசன், இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர்கள் பா ரஞ்சித், வெங்கட் பிரபு, நடிகர் சிம்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் கவர்ந்து தொடர்ந்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தை ஒட்டி தமிழகத்திற்கு வந்துள்ள சிதம்பரம் மற்றும் படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்த நடிகர்களை குறிப்பாக கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளனர். அவர்களுடன் இணைந்து கமல்ஹாசனும் உரையாடல் நிகழ்த்தியுள்ளார்.
மஞ்சுமெல் பாய்ஸ் டீமை சந்தித்த கமல்: இந்த சந்திப்பின்போது குணா படப்பிடிப்பின்போது நடந்த பல சுவாரசியங்களை கமல்ஹாசன் அவர்களுடன் பகிர்ந்துள்ளார். குணா படப்பிடிப்பின்போது குணா குகையில் இருந்து எடுக்கப்பட்ட குரங்கு குட்டிகளின் மண்டையோடுகள் குறித்து அவர் பேசி உள்ளார். அந்த மண்டை ஓடுகளை தன்னுடைய ஹேராம் படத்தில் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வெளியான குணா படத்தின் படப்பிடிப்பின் போது கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்த பல்வேறு பிரச்சனைகள் தற்போது அடுத்தடுத்து பேசப்பட்டு வருகின்றன.
தனுஷை இயக்கும் சிதம்பரம்: தன்னுடைய ஒரே படத்தில் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ள சிதம்பரத்திற்கு தமிழ், மலையாளம் என அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அடுத்ததாக அவர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப்படத்தை மதுரை அன்பு தன்னுடைய கோபுரம் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார். வித்தியாசமான ஜானர்களில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வரும் தனுஷிற்கு, சிதம்பரம் எந்த வகையான கதைக்களத்தை கொடுப்பார் என்று தற்போதே ரசிகர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்


Click it and Unblock the Notifications











