மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் மீது MeToo குற்றச்சாட்டு.. முதல் பட ஹீரோயின் கிளப்பிய பகீர்!

திருவனந்தபுரம்: மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் மீது அவரது முதல் படத்தில் நடித்த நடிகை பாலியல் குற்றச்சாட்டை அடுக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் பிப்ரவரி 22ம் தேதி மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அதிவேகமாக 100 கோடி வசூலை ஈட்டிய மலையாள படமாக மாறியுள்ளது.

Manjummel Boys Director Chidambaram S Poduval faces MeToo controversy by Prapti Elizabeth

தமிழ்நாட்டிற்கு தனது பாய்ஸ் டீமுடன் வந்த இயக்குநர் சிதம்பரம் குணா படத்தின் நாயகன் கமல்ஹாசனை சந்தித்து அவரது ஆசியை பெற்றார்.

மஞ்சுமெல் பாய்ஸ் கதை என்ன?: கேரளாவில் இருந்து மஞ்சுமெல் பாய்ஸ் எனும் கிளப்பை தங்களுக்கென உருவாக்கி வைத்திருக்கும் நண்பர்கள் ஒன்றாக கோவாவுக்கு போகலாம் என திட்டமிட்டு கடைசியில் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். அங்கே குணா குகையை தடை செய்யப்பட்ட பகுதியையும் மீறிச் சென்று அவர்கள் பார்க்கச் செல்ல அதில் சுபாஷ் எனும் நண்பர் டெவில்ஸ் கிட்சன் எனும் குழியில் விழுந்து விடுகிறான். 900 அடி கொண்ட அந்த அதள பாதளத்தில் விழுந்து கிடக்கும் நபர் உயிருடன் இருப்பது தெரிய வர, தீயணைப்பு துறையினரே உள்ளே இறங்க பயப்படுகின்றனர். ஆனால், தனது நண்பனை காப்பாற்ற நடிகர் செளபின் சாஹிர் கயிரை கட்டிக் கொண்டு உள்ளே இறங்கி போராடி தனது நண்பனை மீட்டு வெளியே கொண்டு வருவது தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் கதை.

33 வருஷம்: குணா படத்தில் கமல் சார் நடிக்கும் போது அவருக்கு 33 வயசு என்றும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கிய எனக்கு 33 வயசு என்றும் டார்க் வெப்சீரிஸில் குகைக்குள் செல்பவர்கள் 33 வருடங்கள் கழித்து வெளியே வரும் கனெக்‌ஷன் உடன் சேர்த்து சமீபத்தில் பிக் பாஸ் அபிஷேக்குடன் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது.

Manjummel Boys Director Chidambaram S Poduval faces MeToo controversy by Prapti Elizabeth

பாலியல் சர்ச்சை: அதென்ன மஞ்சுமெல் பாய்ஸ் என டைட்டில் வச்சிருக்காங்க, மஞ்சுமெல் கேர்ள் இருக்கக் கூடாதா என சோஷியல் மீடியாவில் சில பெண்கள் எழுப்பிய கேள்விக்கு சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ஜான் ஈ மேன் படத்தில் நடித்த நடிகை பிராப்தி எலிசபெத் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் குறித்து ஏகப்பட்ட விஷயங்களை கமெண்ட் பக்கத்தில் அடுக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். வாட்ஸப்பில் தனி க்ரூப்பையே வைத்துக் கொண்டு மோசமாக சிதம்பரம் எப்படி மெசேஜ் செய்வார் என்றும் அவருடைய படத்தில் நடிக்கும் போது தனக்கு கொடுக்கப்பட்ட டார்ச்சர்கள் குறித்தும் அவர் பதிவிட பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

Manjummel Boys Director Chidambaram S Poduval faces MeToo controversy by Prapti Elizabeth

சிதம்பரம் இப்படிப்பட்டவரா?: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் இப்படிப்பட்டவரா என சோஷியல் மீடியாவில் தற்போது பலரும் அவரை விளாசி வருகின்றனர். மேலும், அந்த நடிகை இதற்கு முன் இதுகுறித்து வாய் திறக்காமல் படம் வெளியாகி 100 கோடி வசூல் செய்ததும் ஏன் இயக்குநர் குறித்து இப்போது பேசுகிறார் என்றும் ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநருக்கு எதிராக பிராப்தி மீடூ சர்ச்சையை கிளப்பி இருப்பது கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X