அச்சச்சோ.. சைக்கிள் கேப்ல கமல் சாரை கிறுக்குன்னு சொன்ன மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர்.. எதுக்கு?
சென்னை: கடந்த மாதம் பிப்ரவரி 22ம் தேதி மலையாள இயக்குநர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. வெள்ளிக்கிழமையான நேற்று தமிழ்நாட்டில் வெளியான ஜோஷ்வா, போர் உள்ளிட்ட படங்களை விட அதிகளவில் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். பல ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இங்கேயும் ஓடி வருகிறது.
தமிழ்நாட்டில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்புக்கு காரணமே கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இடம்பெற்ற குகையும் அந்த படத்தில் இடம்பெற்ற "கண்மணி அன்போடு காதலன்" பாடலும் இந்த படத்தில் இடம்பெற்று இருப்பது தான்.

கொடைக்கானலும் ஹவுஸ்ஃபுல்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்க்க தியேட்டருக்குத் தான் ரசிகர்கள் படையெடுக்கின்றனர் என்று பார்த்தால், படத்தை பார்த்த கேரளா மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்கள் மீண்டும் கொடைக்கானலுக்கு சென்று குணா குகையை பார்க்க படையெடுத்து வருகின்றனர். காதல் ஜோடிகளும், நண்பர்களும் கூட்டம் கூட்டமாக குணா குகையை பார்க்க சென்று வர காரணமாக மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அமைந்து விட்டது.
பட்ஜெட் எவ்வளவு?: மலையாள படங்கள் மினிமம் பட்ஜெட்டில் தரமான படங்களை கொடுத்து வருகின்றன. அங்கேயே அதிக பொருட்செலவு என சொல்லப்படும் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 60 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்த வார முடிவில் 80 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குணா குகையில் சில காட்சிகளும், அதே போல கேரளாவில் செட் போட்டு சில ரிஸ்க்கான காட்சிகளையும் கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் எடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் சிதம்பரம்.

கமல்ஹாசனை சந்தித்த படக்குழு: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கமல் சாருக்கு போட்டுக் காட்டுங்க என பலரும் சிதம்பரத்துக்கு கமெண்ட் போட ஆரம்பித்து விட்டனர். அவரை இங்கே அழைத்தால் நல்லா இருக்காது என நினைத்து ஒட்டுமொத்த மஞ்சுமெல் பாய்ஸ் டீமுடன் சென்னைக்கே புறப்பட்டு வந்து விட்டார் சிதம்பரம். கமல்ஹாசன், குணா படத்தை இயக்கிய சந்தான பாரதி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களை சந்தித்தனர்.
கிறுக்கு புடிச்சவரு: குணா குகையில் இப்பவே எங்களால் இத்தனை டெக்னாலஜி, எல்இடி லைட் வசதி இருந்தே செல்ல கஷ்டமாக இருந்தது. அந்த காலத்துல எதுவுமே இல்லாமல், "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல" என்பதை சொல்ல ஓடிப் போய் ஒரு இடத்துல காலை தூக்கி வச்சு சொல்லியிருப்பாரு. அந்த இடத்துக்கு எங்களாலயே போக முடியல.. இதெல்லாம் செய்யணும்னா கமல் சார் மாதிரி கிறுக்கு புடிச்சிருந்தாதான் செய்ய முடியும் என சினிமா மீது கமல்ஹாசன் எந்தளவுக்கு கிறுக்கு பிடித்தவர் என்பதை சொல்லியிருக்கிறார் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம்.
கொண்டாடும் ரசிகர்கள்: கஷ்டப்பட்டு குணா படம் எடுத்து அப்போ கிடைக்காத பாராட்டுக்கள் இப்போ கர்மா இஸ் பூமரங் போல கமல் பட்ட கஷ்டத்துக்கு பலனாக மஞ்சுமெல் பாய்ஸ் உருவாகி பாராட்டுக்களை பெற்று வருவதும் அதில் முக்கிய பங்கு கமலுக்கு இருக்கிறது என அந்த படத்தின் இயக்குநர் சொல்வதும் உலக நாயகன் ரசிகர்களை உச்சிக் குளிர செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











