Manjummel Boys: படம் பார்த்து கமல் சாருக்கு புல்லரித்தது! Filmibeat-க்கு மஞ்சும்மல் பாய்ஸ் பேட்டி
சென்னை: சிதம்பரம் பொடுவல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சென்று குகை ஒன்றில் சிக்கிக்கொள்வதும்; அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதையும் ஒன்லைனாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்துக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக கண்மணி அன்போடு காதலன் பாடல் படத்தில் வரும் இடத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இந்தச் சூழலில் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு பில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் நல்ல படங்களே சமீபகாலமாக வருவதில்லை. ரத்தம், துப்பாக்கி, வன்முறை கலந்துதான் வருகிறது என்று ரசிகர்களிடம் பலமாகவே கருத்து எழ ஆரம்பித்திருக்கிறது. அதேசமயம் மலையாள திரையுலகில் சமீபமாக வரும் படங்கள் அட்டகாசமாக இருக்கின்றன. கண்ணூர் ஸ்குவாட், பிரமயுகம் உள்ளிட்ட படங்கள் கேரளாவை தாண்டி பிற மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றன. அந்தவகையில் மலையாளத்தில் இன்னொரு சூப்பர் படமாக வந்திருப்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ்.

மஞ்சும்மல் பாய்ஸ்: சிடஹ்ம்பரம் பொடுவல் இயக்கத்தில் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம்தான் மஞ்சும்மல் பாய்ஸ். மஞ்சும்மல் ஊரை சேர்ந்த நண்பர்கள் கோவா செல்ல டூர் பிளான் போட்டு கடைசியில் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். அங்கு குணா குகையில் சிக்கிக்கொள்ளும் அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். சர்வைவல் ஜானரில் வெளியாகியிருந்தாலும் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் செம ரெஸ்பான்ஸ்: சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான குணா படத்தில் 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் கொடைக்கானலில் ஒரு குகையில் எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு அந்தக் குகை குணா குகை என்றே அழைக்கப்படுகிறது. அந்தக் குகையை மையமாக வைத்தும்; படத்தில் முக்கியமான இடத்தில் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலை இடம்பெற செய்ததும் தமிழ் ரசிகர்களை படத்துடன் ரொம்பவே கனெக்ட் ஆக செய்திருக்கிறது. இதன்காரணமாக படத்துக்கு கோலிவுட் ரசிகர்கள் தங்களது பலத்த பாராட்டை கொடுத்துவருகிறார்கள்.
கமலுடன் சந்திப்பு: இந்தச் சூழலில் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவின் நேற்று கமல் ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்தையும் பாராட்டையும் பெற்றார்கள். அவர்களிடம் படம் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார் கமல் ஹாசன். படத்தின் இயக்குநர் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பதும் கவனிக்கத்தக்கது. பிறகு குணா படத்தை இயக்கிய சந்தானபாரதி, கமல் ஹாசன் மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினர் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து பில்மிபீட் தமிழுக்கு படக்குழுவினர் பிரத்யேக பேட்டி அளித்தனர்.
இயக்குநர் சிதம்பர் பேட்டி: முதலில் பேசிய படத்தின் இயக்குநர் சிதம்பரம், "கமல் ஹாசனை பார்த்ததை என்னால் நம்பவே முடியவில்லை. குணா படம் இல்லாமல், கமல் சார் இல்லாமல் இந்தப் படம் இல்லை. தமிழ் மக்களுக்கு ரொம்பவே நன்றி. கேரளாவைவிட இங்கு மஞ்சும்மல் பாய்ஸ்க்கு நல்ல சப்போர்ட் இருக்கிறது. படத்தை பற்றி கமல் நிறைய பேசி படம் பிடித்திருக்கிறது என்று சொன்னார். அது பெரிய விஷயம். ஒரு மாஸ்டரை சந்தித்தது போல் இருந்தது எனக்கு. கண்மணி அன்போடு காதலன் பாடல் தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று எனக்கு தெரியும். அதனால் முக்கியமான இடத்தில் அந்தப் பாடலை ப்ளேஸ் செய்தேன்" என்றார்.
ஸ்ரீநாத் பாஸி கூறியது: அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஸ்ரீநாத் பாஸி, "எங்களை கமல் ஹாசன் பாராட்டினார். எனது நடிப்புக்கு இவ்வளவு அப்ளாஸ் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. தமிழ் மக்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை தியேட்டரில் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். இப்போதுதான் பார்க்கப்போகிறேன். கமல் ஹாசனும் நேரம் செலவிட்டது பெருமையாக இருக்கிறது" என்றார்.
இசையமைப்பாளர் சுஷின்: அடுத்ததாக பேசிய இசையமைப்பாளர் சுஷின், "கமல் ஹாசனை சந்தித்தது எனக்கு ரொம்பவே பெருமை. அவர் ஒரு மாஸ்டர் கிளாஸ். படம் பற்றி நிறைய பேசினார். படத்தில் கண்மணி பாடல் எந்த இடத்தில் வரும் என்று காத்திருந்ததாக கமல் எங்களிடம் கூறினார். நாங்கள் பாடலை ப்ளேஸ் செய்த இடத்தை பார்த்தபோது புல்லரித்துவிட்டதாகவும் கமல் ஹாசன் சொன்னார். அதை கேட்கும்போது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது" என்றார்.
ஆர்ட் டைரக்டர் அஜய்: தொடர்ந்து பேசிய கலை இயக்குநர் அஜய், "குணா குகை போல் கொச்சியில் நாங்கள் செட் போட்டோம். 50 அடி ஆழம், 150 அடி நீளம் என அந்த செட்டை போட்டோம். சில காட்சிகள் மட்டும் ஒரிஜினல் குகையில் எடுத்தோம். இந்த செட்டை போடுவதற்கு நாங்கள் 3 மாதம் நேரம் எடுத்துக்கொண்டோம். கொடைக்கானல் சூழ்நிலையை அப்படியே நாங்கள் கொச்சியில் கொண்டு வந்தோம். படமும், கலை இயக்கமும் கமல் சாருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











