மஞ்சும்மல் பாய்ஸ்.. கண்மணி அன்போடு காதலன் பாட்டால் இளையராஜாவுக்கு ஏற்பட்ட சிக்கல்!
சென்னை: கடந்த மாதம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் படம் பற்றியும், அது படமாக்கப்பட்ட விதமும் கடந்த சில நாட்களாக பலராலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இளையராஜா இசையில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் என்று சொல்லலாம். இதனால், இளையராஜாவை சில நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த மஞ்சம்மல் என்ற ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் 11 பேர் கொண்ட நண்பர்கள், சுற்றுலா செல்கின்றனர். கோவாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு பின் அது தோல்வியில் முடிய, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, குணா குகையை பார்க்க வருகின்றனர். அந்த குகையின் அழகைப்பார்த்து வியந்து போன நண்பர்கள் புகைப்படம் எடுப்பதற்காக தடையை மீறி செல்கின்றனர். அப்போது, ஒரு பள்ளத்தில் நண்பன் சுபாஷ் விழுந்துவிட அங்கிருந்த அனைவரும் பதறிப்போய் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது, குழியில் விழுந்த நண்பன் சுபாஷை மீட்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நோ காதல்.. நோ ரொமான்ஸ்: 1991ம் ஆண்டுக்கு முன்பு வரை டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்பட்ட குகை, நடிகர் கமல்ஹாசனின் குணா படம் அதில் படமாக்கப்பட்டதற்கு பிறகு, குணா குகை என்றே அழைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காதல் சீன் இல்லை, ரொமான்ஸ் இல்ல, சண்டை சீன் இல்லை, குறிப்பான ஹீரோ இல்லை. படத்தில் நடித்த 11 நண்பர்களும் ஹீரோதான்.
கண்மணி அன்போடு காதலன்: அது மட்டுமில்லாமல் படம் தொடங்கும் போது கண்மணி அன்போடு காதலன் பாடல் ஒலிக்கும் போது டைட்டில் கார்டோடு படம் தொடங்குகிறது. அதே போல, கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் மெய்சிலிர்க்கும் வகையில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்று பாட்டை கேட்டு ஒட்டுமொத்த தியேட்டரும் விசில் அடித்து ரசித்தனர். இத்தனை ஆண்டுகளாக காதலன் காதலிக்காக பாடிய பாடலாக பார்க்கப்பட்டு வந்த இந்த பாடல், மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு நண்பர்களுக்கான பாடலாக மாறி உள்ளது. இதுதான் தற்போது இளையராஜாவிற்கு சிக்கலாக மாறி உள்ளது.
மோசமான விமர்சனம்: அதாவது, என் பாடல்களை பாடுவதற்கு முன்னர், என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையானால் சட்டப்படி குற்றமாகும். என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுகிறவர்களோ, இசை வாசிக்கிறவர்களோ அப்படிச் செய்வது தவறு என்பதை நீங்கள் உணர வேண்டும். மேலும், என்னுடைய பாடல்களை தங்களுடைய படங்களில் உபயோகிப்பவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று மோசமாக விமர்சித்து இருந்தார் இளையராஜா, இது 2018ம் ஆண்டு மிகபெரிய புயலை கிளப்பியது.

வாய் திறக்காமல் இருப்பது ஏன்: தமிழ் சினிமாவில் ஒரு சில காட்சிகளிலும், மேடையில் பாடுவதற்கே கொதித்துப்போன இளையராஜா. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் மொத்த வெற்றிக்கும் கண்மணி அன்போடு பாடல் தான் தாங்கி நிற்கிறது. ஆனால் இதுவரை அதை பற்றி அவர் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்றும், இதற்கும் ராயல்டி கேட்பாரா என்றும் சில இணையவாசிகள் இளையராஜாவை வம்பு இழுத்து இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











