Manjummel Boys OTT: ஓடிடியில் வெளியானது மஞ்சும்மல் பாய்ஸ்.. ரசிகர்கள் ஹாப்பி!

சென்னை: கொடைக்கானலில் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மலையாள திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி 22 ந் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை அள்ளியத்திரைப்படம் தற்போது ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி உள்ளது.

மலையாளத் திரைப்படங்களான பிரேமம், ஹிருதயம், 2018, மின்னல் முரளி, க்ரூப், ஐயப்பனும் கோஷியும் என பலத் திரைப்படங்களுக்கு தமிழ் நாட்டில் பெறும் வரவேற்பு கிடைத்தது. மலையாளத் திரைப்படங்கள் ஆண்டு தோறும் ஏதோ ஒரு வித்தியாசமான கதையை கொடுத்து தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைத்துவிடும் அந்த வகையில் அண்மையில் வெளியானத் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் உலகளவில் 236 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

manjummel boys movie streaming now on Disney plus hotstar

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவான மலையாளப் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். கேரளாவின் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்கு 11 நண்பர்கள் சுற்றுலா வருகிறார்கள். அவர்களின் ஒருவன், அந்தக்குகையில் இருந்த பள்ளம் ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை.

கண்மணி அன்போடு காதலன்: மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மலையாள படத்தில் 60% தமிழ் பேசுவது மட்டுமல்லாமல், இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த படத்தில் உலகநாயகன் கமலஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடலும் இடம்பெற்றது தான் ஹைலைட். இந்த படம் பார்த்த உலக நாயகன் கமல்ஹாசனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், ரஜினிகாந்த், சிம்பு என பலரும் படக்குழுவினர் சந்தித்தனர்.

தயக்கம் கட்டிய ஒடிடி நிறுவனம்: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்தது. அனால், தயாரிப்பாளர் படத்தை ரூ.20 கோடிக்கு விற்கும் முடிவில் இருந்ததால் எந்த ஓடிடி நிறுவனமும் படத்தை வாங்க முன்வரவில்லை திரையரங்கில் வெற்றி கண்ட மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பெரும்பான்மையான மக்கள் பார்த்துவிட்ட காரணத்தால், அதிக விலை கொடுத்து வாங்குவது தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டின.

ஓடிடியில்: இதையடுத்த ஒரு வழியாக பேச்சுவார்த்தை நடத்தை படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு கடந்த மாதம் ஏப்ரல் 5ந் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் அறிவித்தது போல வெளியாகவில்லை. பின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி அறிவித்தது. அதன்படி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி உள்ளது. தியேட்டரில் இந்த படத்தை தவறவிட்ட ரசிகர்கள் சாவகாசமாக வீட்டில் குடும்பத்தோடு இந்த படத்தை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X