மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. முதல் மலையாள படமாக சாதனை!
சென்னை: மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான மஞ்சும்மல் பாய்ஸ் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியிருந்தது. குறிப்பாக இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் மிக அதிகமாக கொண்டாடினர். இந்த படத்தில் இடம்பெற்ற குணா குகை மற்றும் கண்மணி அன்புடன் பாடல் ஆகியவை கமல்ஹாசனின் குணா படத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இதனால் தமிழ் ரசிகர்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை கொண்டாடினர். தமிழில் அதிகமான வசூலையும் இந்த படம் ஈட்டியது. இந்நிலையில் இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ரஷ்யாவின் கினோபிராவோ திரைப்பட விழாவில் இந்த படம் நாளையும் அக்டோபர் 1ம் தேதியும் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் படம்: மலையாளத்தில் உருவாகி கிடந்த பிப்ரவரி மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசான மஞ்சும்மல் பாய்ஸ் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 240 கோடிகளுக்கும் அதிகமான கலெக்ஷனை சர்வதேச அளவில் பெற்றது. குறிப்பாக இந்த படம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து தமிழில் சக்கைப்போடு போட்டது. அதிக வசூலையும் பெற்றது. கேரளாவில் இருந்து கொடைக்கானலில் குணா குகைக்கு சுற்றுலா செல்லும் 11 நண்பர்களில் ஒருவர் குணா குகையில் சிக்கிக் கொள்ள அவரை மீட்கும் வகையில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்கலாம் அமைந்திருந்தது.
தமிழ் ரசிகர்களை கவர்ந்த படம்: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் கமல்ஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற குணா குகையும், கண்மணி அன்போடு காதலன் பாடலும் இடம் பெற்றிருந்தது. இந்த பாடல் முன்னதாக குணா படத்தில் காதல் பாடலாக அமைந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இந்த பாடலை நண்பர்களுக்காக இயக்குனர் பயன்படுத்தியிருந்தார். கமல்ஹாசனின் குணா படம் வெளியான காலகட்டத்தில் அதிகமான ரசிகர்களை கவறாத நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் குணா படத்தை மீண்டும் ரசிகர்களின் நினைவில் கொண்டு வந்தது. இதை தமிழ் ரசிகர்கள் வகுவாக கொண்டாடினர்.
சர்வதேச அங்கீகாரம்: இதன் வெளிப்பாடே தமிழில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் மிகப்பெரிய சக்சஸ் பெற்றதற்கு காரணமாக அமைந்தது. இதுவரை தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிகமான வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைத்தது. இதனிடையே, திரையரங்குகளில் மற்றும் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் படம் குவித்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ரஷ்யாவின் கினோபிராவோ திரைப்பட விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் நாளையும் வரும் அக்டோபர் 1ம் தேதியும் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
ரஷ்ய திரைப்பட விழா: ரஷ்யாவின் நேற்றைய தினம் கினோபிராவோ திரைப்பட விழா துவங்கியுள்ளது. வரும் அக்டோபர் 4ம் தேதி வரை இந்த திரைப்பட விழா தொடர்ந்து நடக்கவுள்ளது. இந்த விழாவில்தான் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படம் தொடர்ந்து அடுத்தடுத்து இரு தினங்கள் திரையிடப்பட உள்ளது. இதன்மூலம் இந்த விழாவில் திரையிடப்படு முதல் மலையாளப் படம் என்ற பெருமையும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது. மிகவும் பரபரப்பான திரைக்கதையும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தப் படம் வெளிநாட்டு ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











