இப்படியொரு மோசடி வழக்கில் சிக்கிட்டாங்களே.. மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் வங்கி கணக்கு முடக்கம்
திருவனந்தபுரம்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹீர், ஸ்ரீநாத் பஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வேற லெவலில் ஓடி வந்த திரைப்படம் 230 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் அந்த படம் உருவான நிலையில், அதற்கு உறுதுணையாக பணம் போட்டவருக்கு படம் மிகப்பெரிய லாபம் வந்த நிலையில் சொன்னபடி தனது பணத்தை திருப்பித் தரவில்லை என வழக்கு தொடர்ந்துள்ளார்.

மஞ்சுமெல் பாய்ஸ் கதை: மஞ்சுமெல் பாய்ஸ் நண்பர்கள் குழு கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். கடைசியாக குணா குகையை பார்த்து விட வேண்டும் என செல்லும் அவர்கள் தடை செய்யப்பட்ட பகுதியை தாண்டி கீழே இருப்பதுதான் உண்மையான குணா குகை என நண்பர்களில் ஒருவர் சொல்ல, ஆர்வக் கோளாறு காரணமாக குணா குகைக்கு செல்கின்றனர். அங்கே சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீநாத் பஸி டெவில்ஸ் கிச்சன் எனும் பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்துவிட அவரைக் காப்பாற்ற நண்பர்கள் எடுக்கும் முயற்சி தான் இந்தப் படத்தின் கதை.
குணா பாடல்: குணா குகைக்குள் சிக்கிய நண்பனை காப்பாற்ற மீட்புக் குழுவினரே அஞ்சி நடுங்கும் நிலையில் துணிந்து இறங்கி நண்பனை காப்பாற்றிக் கொண்டு செளபின் சாஹிர் மேலே வரும் இடத்தில் குணா படத்தில் இடம் பெற்ற இளையராஜா இசையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற " கண்மணி அன்போடு காதலன்" பாடலின் வரிகளான " மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது" என்கிற வரிகள் இடம்பெற்று தியேட்டரில் படத்தைப் பார்த்த ரசிகர்களை கூஸ்பம்ஸ் ஆக்கியது. அதுதான் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் என படக்குழுவினரை கூறியுள்ளனர்.
தயாரிப்பாளர்கள் கணக்கு முடக்கம்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு இந்திய அளவில் ஏகப்பட்ட பிரபலங்கள் பாராட்டுக்களை குவித்து வந்த நிலையில், சந்தோசமாக இருந்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் மீது வழக்கு: மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 20 கோடி பொருட் செலவில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்தப் படத்தை தயாரிக்க சுமார் 7 கோடி ரூபாய் கொடுத்த சிராஜ் வலியதாரா என்பவருக்கு படத்தின் லாபத்தில் 40 சதவீதம் கொடுப்பதாக தயாரிப்பாளர்களான பரவா பிலிம்ஸ் மற்றும் பங்குதாரர் ஷான் ஆண்டனி ஆகியோர் வாக்கு கொடுத்திருக்கின்றனர். ஆனால் படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், சொன்னபடி பணத்தை திருப்பித் தரவில்லை என சிராஜ் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்கை முடக்கும் படி உத்தரவிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











