மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை சந்தித்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு எதிர்பார்த்த ஆண்டாக அமையவில்லை என்றாலும், தெலுங்கு, மலையாள படங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய வசூலை அள்ளியது. அந்த வகையில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் நாட்டில் வசூலை அள்ளியது. படத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், படக்குழுவினரை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்து பாராட்டி உள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இயக்குநர் சிதம்பரம் எஸ் பொதுவாள் இயக்கத்தில் உருவான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். மிகவும் குறைவான பட்ஜெட்டில் மலையாளத்தில் வெளிவந்த இந்த படம் வெளியான நாள் முதல் ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்று திரையரங்குகளில் தாறுமாறாக ஓடியது. குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான கண்மணி அன்போடு காதலன் பாடலை படக்குழு படத்தில் பயன்படுத்தி இருந்தனர். படம் தொடங்கும் போதே இந்த பாடலை ஒளிபரப்பி தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துவிட்டார் இயக்குநர்.

Manjummel Boys team met Superstar Rajinikanth at his residence

வசூலை அள்ளியது: மலையாளத்தில் சக்கைபோடு போட்ட இப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் சக்கைப்போடு போட காரணமே அந்த பாடல் தான். கொடைக்கானால் மலையை சுற்றியும், 11 நண்பர்களை வைத்து மட்டுமே படத்தை இயக்கிவிட்டு பல கோடியை அள்ளிவிட்டார் இயக்குநர். படம் வெளியான போது கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து முதல் ஆளாக பாராட்டி, குணா படப்பிடிப்பின் போது நடந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். காதல் என்பது நண்பர்களுக்குள்ளும் இருக்கும் என்பதை ஒரே பாடல் மூலம் காட்சிப்படுத்தியது தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Manjummel Boys team met Superstar Rajinikanth at his residence

பாராட்டிய ரஜினி: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை வீட்டுக்கு அழைத்து பாராட்டி உள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே போல கடந்த வாரம் நடிகர் சிம்பு, படக்குழுவினரை பாராட்டினார். இந்த சந்திப்பில், நண்பர்களுக்குள் இருக்கும் காதலை சொன்ன விதம் தனக்கு பிடித்து இருந்தது என்றும், இந்த படத்திற்கு பிறகு கண்மணி அன்போடு காதலன் பாடலின் மீதான கண்டோட்டமே மாறிவிட்டது என்று சிம்பு படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார்.

Manjummel Boys team met Superstar Rajinikanth at his residence

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X